பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்ட பள்ளிகள் மேம்பாடு: ரூ.1.2 கோடி ஒதுக்கீடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் மாவட்ட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய 1.2 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை நல்ல முறையில் பராமரிக்க ஆண்டு தோறும் பள்ளி மானியம் என்ற பெயரில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்படி 1 முதல் 15 மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய், 16 முதல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 251 முதல் 1,000 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தலா 75

வேலுார்: வேலுார் மாவட்ட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய 1.2 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை நல்ல முறையில் பராமரிக்க ஆண்டு தோறும் பள்ளி மானியம் என்ற பெயரில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்படி 1 முதல் 15 மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய், 16 முதல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 251 முதல் 1,000 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய், அதற்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகின்றது.
இது குறித்து வேலுார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில் 335 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த 1.2 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் மாணவர்கள் வருகைக்கு ஏற்ப இந்த நிதி பிரித்துக் கொடுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X