வேலுார்: ஒன்றுபட்ட வேலுார் மாவட்டத்தில், 50 ஏக்கரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்கும் திட்டம் தொடங்கி உள்ளது.
இது குறித்து வேலுாரில் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் இன்று கூறியதாவது:
ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், 5,000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி 50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவின புற்களான கொழுக்கட்டை, புல், முயல் மசால், சூபா புல், அகத்தி, முள் முருங்கை, வெல்வேல், வேம்பு வளர்க்கப்படும்.
வேலுார் மாவட்டம், கொண்டம நாயக்கன் பாளையத்தில் 18 ஏக்கர், ராணிப்பேட்டை மாவட்டம், லாடவரத்தில் 15 ஏக்கர், திருப்பத்துார் மாவட்டம், மல்லகுண்டாவில் 17 ஏக்கர் நிலத்தில் பயிரிடும் பணிகள் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE