பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,6 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்.,04) நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,
செப்.,6 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்.,04) நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


செப்.,5 ல்


நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


செப்.,06 ல்


நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ( திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்


செப்.,07 மற்றும் 08



மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய(நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news





மீனவர்களுக்கான எச்சரிக்கை



வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக செப்.,04 மற்றும் 05ல் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்
கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் செப்.,05 முதல் 07 வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்.,04 முதல் 08 வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X