தங்கம் வென்றார் பிரமோத்: பாராலிம்பிக் பாட்மின்டனில் புதிய சாதனை

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்., 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பஹத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21-11, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு
ManojSarkar, ParaBadminton,  Pramod Bhagat, paralymbics

டோக்கியோ: பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்., 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பஹத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21-11, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரிட்டனின் டேனியலிடம் 8-21, 10-21 என எளிதாக வீழ்ந்தார்.


பிரமோத் பிரமாதம்

பைனலில் பிரமோத், டேனியல் மோதினர். முதல் செட்டையில் 2-5 என பின்தங்கிய பிரமோத், பின் சிறப்பாக செயல்பட 21-14 என வென்றார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் பிரமோத் 3-11 என பின்தங்கினார். இதன் பின் எழுச்சி பெற்ற பிரமோத் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். கடைசியில் டேனியலை முந்திய பிரமோத், இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். 45 நிமிட போராடத்தின் முடிவில் 21-14, 21-17 என வென்ற பிரமோத், பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.


latest tamil news



வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனோஜ்-தய்சுகே மோதினர். முதல் செட்டை மனோஜ் 22-20 என போராடி வென்றார். அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார். 47 நிமிட போட்டியில் முடிவில் 22-20, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற மனோஜ், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் பட்டியலில் 25 வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Kumar - Salem,இந்தியா
04-செப்-202120:17:37 IST Report Abuse
Suresh Kumar வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
04-செப்-202118:46:47 IST Report Abuse
சைவராஜ் விஜய் வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X