பொது செய்தி

தமிழ்நாடு

‛சேர்வோம் - எழுவோம்' ரோந்து முறை அறிமுக விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, ‛சேர்வோம் - எழுவோம்' என்ற ரோந்து முறை அறிமுக விழா ஆற்காட்டில் இன்று நடந்தது.மாவட்ட போலீஸ் எஸ்.பி., தீபா சத்யன் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்கள் போலீசாரோடு இணைந்து சமூக காவலில் ஈடுபட்டு
‛சேர்வோம் - எழுவோம்' ரோந்து முறை அறிமுக விழா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, ‛சேர்வோம் - எழுவோம்' என்ற ரோந்து முறை அறிமுக விழா ஆற்காட்டில் இன்று நடந்தது.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., தீபா சத்யன் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்கள் போலீசாரோடு இணைந்து சமூக காவலில் ஈடுபட்டு குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், பிரத்தியோக ரோந்து அமைப்பு, கிராமிய விழிப்புணர்வு குழுக்கள், ரோந்து கண்காணிப்பு மின் அமைப்பு, நாங்கள் உங்களுக்காக, உடலில் அணியும் கேமரா வசதி, நவீனமயமாக்கப்பட்ட சிறப்பு ரோந்துக் குழுக்கள் போன்றவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, ‛சேர்வோம் - எழுவோம்' என்ற ரோந்து முறை இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 55 ரோந்துகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ரோந்து போலீசார் செல்வார்கள்.
இந்த ரோந்து போலீசார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தினமும் 10 பேரிடம் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் இருப்பிடம், குடும்ப விவரம் அறிந்து கொண்டு அவர்களுக்கு ரோந்து முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
இதனால் அந்த பகுதியில் ஏற்படும் குற்ற சம்பவங்கள், குற்றவாளிகள் குறித்த தகவல்கள், சமூகப் பிரச்சனைகள், ஆதரவற்றோர் குறித்த விவரம், இளைஞர்களை பாதிக்கக்கூடிய தகவல்களை பெற்று சம்மந்தப்பட்ட ரோந்து போலீசாருக்கு தெரிவித்து குற்றங்கள் நடக்காதபடி நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
இது போலீசாருக்கும், மக்களுக்கும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் குற்றங்கள் வெகுவாக குறையும். சிறப்பாக செயல்படும் ரோந்து போலீசாருக்கும், சிறப்பாக தகவல் கொடுக்கும் பொது மக்களுக்கும் மாதந்தோறும் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் இது குறித்த துண்டு பிரசுரங்களை எஸ்.பி., தீபா சத்யன் வெளியிட்டார். விழாவில் கூடுதல் எஸ்.பி., முத்து கருப்பன், டி.எஸ்.பி.,க்கள் பிரபு, புகழேந்தி, கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X