சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொள்ளை வழக்கு: அரசு அதிகாரி மற்றும் எஸ்டேட் ஊழியரிடம் விசாரணை

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, அரசு அதிகாரி மற்றும் எஸ்டேட் ஊழியரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர்.
கோடநாடு கொள்ளை வழக்கு: அரசு அதிகாரி மற்றும் எஸ்டேட் ஊழியரிடம் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, அரசு அதிகாரி மற்றும் எஸ்டேட் ஊழியரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர். கோடநாடு கொள்ளையில் தேடப்பட்ட கனகராஜ், 2017 ஏப்., 28ல், சேலம் அருகே சாலை விபத்தில் இறந்தார். வழக்கில் சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க, எஸ்.பி., ஆஷிஸ் ராவத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரி மற்றும் எஸ்டேட் ஊழியரிடம் தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனகராஜ் அண்ணன் தனபாலிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - sydney,ஆஸ்திரேலியா
05-செப்-202106:32:25 IST Report Abuse
shan முதலில் வருமான வரி துறை எல்லா அறைக்குள் நன்றாக ஆராய வேண்டும் , எல்லா பொருட்களையும் ,டாக்குமெண்ட்ஸ்யும் கைப்பற்றவேண்டும் .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202122:11:40 IST Report Abuse
Pugazh V இபிஎஸ் ஸை காமலாலயம் ஆபீசுக்குள்ள வெச்சுப்பாங்க.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
05-செப்-202113:14:22 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅங்கே போயி அரெஸ்ட் பண்ணலாமே ? உங்களுக்கு சட்டம் ஒழுங்குதானே முக்கியம் ?...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
04-செப்-202118:57:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி கவர்னர் மாளிகைக்குள் ஈப்பீஸ் ஒளிஞ்சிக்கிட்டாருன்னா போலீஸ் உள்ளே நொழைஞ்சி கைது பண்ண யாரோட ரப்பர் ஸ்டாம்ப்பு வேண்டும்?
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
04-செப்-202120:03:14 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் இருக்கலாம் என் எனில் SV SEKAR எங்கே ஒளிந்து இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X