ஆமதாபாத் குண்டு வெடிப்பு: தீர்ப்பு ஒத்தி வைப்பு| Dinamalar

ஆமதாபாத் குண்டு வெடிப்பு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

Added : செப் 04, 2021
Share
ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆமதாபாதில் 2008ம் ஆண்டில் 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன.இதில் 56 பேர் இறந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆமதாபாதில் 2008ம் ஆண்டில் 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன.இதில் 56 பேர் இறந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த குண்டு வெடிப்பை இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் நடத்தியது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் 85 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 1,100க்கும் அதிகமானோர் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணைகளும் முடிந்து தீர்ப்பை நீதிபதி ஏ.ஆர்.படேல் நேற்று ஒத்தி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X