'வானத்தை நோக்கி சுடுங்கள்,மக்களை சுடாதீர்கள்'-தாலிபான்கள் 'பெருந்தன்மை'

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
காபூல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது.தலைநகர் காபூலில் முன்னதாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்கள் இன்னும் தாலிபான்களால் கைப்பற்றப்படாமல் உள்ள நிலையில் அவற்றை கைப்பற்ற தாலிபான் வன்முறை
தலிபான்,ஆப்கன்,

காபூல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது.

தலைநகர் காபூலில் முன்னதாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்கள் இன்னும் தாலிபான்களால் கைப்பற்றப்படாமல் உள்ள நிலையில் அவற்றை கைப்பற்ற தாலிபான் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நங்காகார் மாநிலத்தின் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


latest tamil news


ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றியபோதிலும் நாட்டின் வடக்கே உள்ள பஞ்ச்ஷீர் Panjshir பள்ளத்தாக்கு பகுதி மட்டும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தலிபான்களுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். அஹ்மத் மசூத் தலைமையிலான அந்த படையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தலிபான்களை எதிர்க்கின்றனர். இரு தரப்புக்கும் பள்ளத்தாக்கில் சண்டை நடந்து வரும் நிலையில், பஞ்ச்ஷீரை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் நேற்று அறிவித்தனர். காபூல் உள்ளிட்டஎல்லா நகரங்களிலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். அப்போது, குண்டுகள் பாய்ந்து, காபூலில் 17 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனால் தலிபான்கள் மீது மக்களுக்கு வெறுப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை தவிருங்கள் என தலிபான்களுக்கு அதன் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுகுறித்த தாலிபான் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறுகையில் ஆப்கானிஸ்தான் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்த வேண்டாம் என்று தங்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடிமக்களை அச்சுறுத்த தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-செப்-202103:29:52 IST Report Abuse
meenakshisundaram அட பாவி இதுவா பத்திரிக்கை தர்மம் ?-தாலிபானின் பெருந்தன்மை ன்னு போடுறீங்களே ?இது திமுக ஹிந்து கோவில்களில் இலவச மொட்டை ன்னு சொல்ற மாதிரில்லா இருக்கு ?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-செப்-202108:04:29 IST Report Abuse
A.George Alphonse கல்லுக்குள் ஈரம்.சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
05-செப்-202105:52:03 IST Report Abuse
மு. செந்தமிழன் இவ்வளவு புத்திசாலித்தனமா யோசிக்கிறாங்களே அப்படி என்னதான் சாப்பிடுவானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X