வானத்தை நோக்கி சுடுங்கள்,மக்களை சுடாதீர்கள்-தாலிபான்கள் பெருந்தன்மை | Dinamalar

'வானத்தை நோக்கி சுடுங்கள்,மக்களை சுடாதீர்கள்'-தாலிபான்கள் 'பெருந்தன்மை'

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (12) | |
காபூல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது.தலைநகர் காபூலில் முன்னதாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்கள் இன்னும் தாலிபான்களால் கைப்பற்றப்படாமல் உள்ள நிலையில் அவற்றை கைப்பற்ற தாலிபான் வன்முறை
தலிபான்,ஆப்கன்,

காபூல்: தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது.

தலைநகர் காபூலில் முன்னதாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்கள் இன்னும் தாலிபான்களால் கைப்பற்றப்படாமல் உள்ள நிலையில் அவற்றை கைப்பற்ற தாலிபான் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நங்காகார் மாநிலத்தின் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


latest tamil news




இதுகுறித்த தாலிபான் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறுகையில் ஆப்கானிஸ்தான் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்த வேண்டாம் என்று தங்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடிமக்களை அச்சுறுத்த தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X