வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் தொழில்நுட்ப விதிகள்: மத்திய அரசு பதில்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை: சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும் வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றை

சென்னை: சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும் வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றை தடுக்க பிப்ரவரியில் இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம் என்ற புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் - 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்க கோரி கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நாடு முழுதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிசர் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது மத்திய தகவல் ஒலிபரப்பு துறை சார்பில் அதன் துணை செயலர் அமரேந்தர் சிங் தாக்கல் செய்த பதில் மனு: சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ பரப்பவோ கூடாது.

நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதிய விதிகளின் கீழ் மூன்று குறைதீர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் குறைதீர் அமைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவை சுய ஒழுங்குமுறை அமைப்பாக இருக்க வேண்டும்.

இது தவிர தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திலும் ஒரு குழு இருக்கும். சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆட்சேபனைக்குரிய பதிவை அரசு அல்லது நீதிமன்றம் நீக்கும் வகையில் விதிகள் இருந்தன. அவற்றை மாற்றி சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களே முடக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

செய்தி வெளியீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. விதிகளை கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது; அரசியல் சாசன விதிகளை மீறவில்லை. எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை செப்.,௧௪க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X