அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனிதர்கள் - விலங்குகள் மோதல்: பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சட்டப்பேரவை விவாதம்:அ.தி.மு.க., - சீனிவாசன்: ஆளில்லா சிறிய விமானம் உதவியுடன், வனப் பகுதிகளை கண்காணிக்கும் திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தினோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில், வனப்பகுதிகளில் ஏராளமான ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. காட்டுப்பன்றிகளை சுட, ஏழு மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, தென்காசி

சட்டப்பேரவை விவாதம்:

அ.தி.மு.க., - சீனிவாசன்: ஆளில்லா சிறிய விமானம் உதவியுடன், வனப் பகுதிகளை கண்காணிக்கும் திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தினோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில், வனப்பகுதிகளில் ஏராளமான ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. காட்டுப்பன்றிகளை சுட, ஏழு மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அனுமதி கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் அரசாணை வெளியிடுவதற்குள் தேர்தல் வந்து விட்டது. அந்த அரசாணையை, தற்போதைய அரசு வெளியிட வேண்டும்.

இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்களுக்காக, ரப்பர் கழகம் துவக்கப்பட்டது. ரப்பர் பால் விலை ஏறும்போது லாபம் கிடைத்தது. விலை குறையும் போது நஷ்டம் ஏற்பட்டது. எனினும், தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினோம்.'டான்டீ' எனப்படும், அரசு தேயிலை தோட்ட கழக இயந்திரங்களை பழுதுபார்க்க, 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, டான்டீ நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.

அமைச்சர் அன்பரசன்: ஊட்டியில் உள்ள டான்டீ தேயிலை தொழிற்சாலைகளுக்கு, 50 கோடி ரூபாயில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன. அவை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீனிவாசன்: மனிதர்கள் - விலங்குகள் இடையிலான மோதலில், இறந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, அ.தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்டது. ஜெயலலிதா அரசு செய்த சாதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அமைச்சர் ராமச்சந்திரன்: வனவிலங்கு மோதலில் இறப்போர் குடும்ப நிவாரணத் தொகை, நான்கு லட்சம் ரூபாயை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியதாக தெரிவித்தார். இன்னும் வழங்கவில்லை; நிதி ஒதுக்கவில்லை. நாங்கள் தான் கொடுக்க உள்ளோம்.பத்து ஆண்டுகளாக, 'டான்டீ' நிறுவனம், நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிதி ஒதுக்கியும் சரியாக செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குள், அதை லாபத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ரப்பர் கழகத்தையும் லாபத்தில் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனிவாசன்: நிவாரண தொகை வழங்க, நிதி ஒதுக்கப்பட்டது. அலுவலர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும். டான்டீ நிறுவனத்தில், நாங்கள் நஷ்டம் ஏற்படுத்தவில்லை; விலை குறையும்போது நஷ்டம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X