சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் ரூ.19,600 மோசடி செய்தவர் கைது!

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்: அறநிலையத்துறை ஊழியரிடம் விமானத்துறையில் வேலை வாங்கிக் தருவதாக ஆன்லைனில் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் வெங்கட்ராஜ், 23. இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூலை 4 ம் தேதி வெங்கட்ராஜ்

நாகப்பட்டினம்: அறநிலையத்துறை ஊழியரிடம் விமானத்துறையில் வேலை வாங்கிக் தருவதாக ஆன்லைனில் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் வெங்கட்ராஜ், 23. இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூலை 4 ம் தேதி வெங்கட்ராஜ் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் விமானத்துறையில் வேலை பார்ப்பதாக கூறி பழக்கமாகியுள்ளார். மொபைல் போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்,விமானத்துறையில் பயணச்சீட்டு ஆய்வாளர் பணி காலியிடமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதோடு விமானத்துறையில் பணியில் சேர்ந்து விடுமாறு வெங்கட்ராஜிடம் கூறியுள்ளார். ஆய்வாளர் பணியை வெங்கட்ராஜிக்கு பெற்றுத் தருவதற்கு 19.600 ரூபாய் ஆன்லைன் மூலமாக அனுப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து ,வெங்கட்ராஜ் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில் வேலை தொடர்பாக வெங்கட்ராஜ் மீண்டும் தொடர்பு கொண்ட போது, அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராஜ் நாகை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து நுாதன முறையில் பணம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X