சிவகிரி அருகே கார் கவிழ்ந்து மதுரை செல்லூரைச் சேர்ந்த இருவர் பலி: 7 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகிரி அருகே கார் கவிழ்ந்து மதுரை செல்லூரைச் சேர்ந்த இருவர் பலி: 7 பேர் படுகாயம்

Added : செப் 04, 2021
Share
தென்காசி:சிவகிரி அருகே கார் கவிழ்ந்து மதுரை செல்லூரைச் சேர்ந்த இருவர் பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.மதுரை செல்லூரைச் சேர்ந்த 9 பேர் குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். கார் தென்காசி மாவட்டம் சிவகிரி செக்போஸ்ட் வடக்கே உள்ள மலை அடிவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து

தென்காசி:சிவகிரி அருகே கார் கவிழ்ந்து மதுரை செல்லூரைச் சேர்ந்த இருவர் பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த 9 பேர் குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். கார் தென்காசி மாவட்டம் சிவகிரி செக்போஸ்ட் வடக்கே உள்ள மலை அடிவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மதுரை செல்லூர் நாகராஜ் ஆசாரி மகன்மதுபிரபு ( 24) என்பவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.மேலும் காரை ஓட்டி வந்த மதுரை செல்லூர் 50 அடி ரோடு சரஸ்வதி தியேட்டர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகமுது நயினார் மகன் மன்சூர் அலிகான் (வயது 31) , மங்கள் ராஜ் பிள்ளை மகன் சுரேஷ் (30), மங்கள்ராஜ் மகன் மகேஷ் (28), அழகுசுந்தரம் ஆசாரி மகன் அருண்குமார், நீதிராஜ் நாடார் மகன்அருண்குமார், சேகர் மகன்வாசகமணி (30), கணேசன் முதலியார் மகன்பேச்சிமுத்து (25), அமுல்ராஜ் பிள்ளை மகன்ஜான் ( 29) ஆகிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் காரை ஓட்டி வந்த மன்சூர் அலிகான் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் மனோகரன்,உதவி ஆய்வாளர் அமிர்தராஜ் ஆகியோர் விரைந்து சென்று விபத்தில் இறந்த மதுபிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் .

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X