கோடையிலும் வீட்டுக்குள் குளிர்ச்சியை தரும் பசுமை வீடுகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
நம் முன்னோர்கள் வெயில், மழை என காலநிலைக்கு ஏற்ப வீடு கட்டினர். ஆனால், இன்று நாம் ஒரு வீடு கட்டினால் போதும் என கட்டி வருகிறோம். இந்நிலையில் கூட பசுமை வீடுகள் கட்டுவதற்கு சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். கோடையில் வீட்டுக்குள் குளிர்ச்சிமுன்னோர்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை கட்டுமான பொருட்களாக பயன்படுத்தி வீடு கட்டினர்.

நம் முன்னோர்கள் வெயில், மழை என காலநிலைக்கு ஏற்ப வீடு கட்டினர். ஆனால், இன்று நாம் ஒரு வீடு கட்டினால் போதும் என கட்டி வருகிறோம். இந்நிலையில் கூட பசுமை வீடுகள் கட்டுவதற்கு சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கோடையில் வீட்டுக்குள் குளிர்ச்சி

முன்னோர்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை கட்டுமான பொருட்களாக பயன்படுத்தி வீடு கட்டினர். இன்றும் சிலர் பசுமை வீடு கட்டுவதற்கு நம் முன்னோர்கள் காட்டிய தொழில்நுட்பம் தான் உதவுகிறது. வீட்டு கழிவுகளை சேகரித்து வயலுக்கு உரமாக பயன்படுத்தினர். முன்னோர்கள் கட்டிய பசுமை வீடுகள் இன்று புதிய தொழில்நுட்பமாக பிரபலமாகி வருகிறது. இயற்கையை அழிக்காமல் கட்டுமானம் கட்ட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் வந்துள்ளது.

வசிக்கும் பகுதியின் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கு ஏற்ப வீடுகளை கட்டினார்கள். வீடுகளின் பல பகுதிகளில் கதவுகள், ஜன்னல்கள், கூரைகள், மரத்தடுப்புகள் என அதிக மரங்களை பயன்படுத்தினர் மரப் பலகை வெப்பம் கடத்தாமல் தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. கோடை காலத்தில் கூட வெளியே வெப்பம் அதிகம் இருந்தாலும் வீட்டுக்குள் குளிர்ச்சியாக தான் இருக்கும். குளிர்காலத்தில் வீட்டுக்குள் பெரியளவில் குளிர் தெரியாது. கதகதப்பாக தான் இருக்கும்.

நவீன கட்டுமானத்தில் வசதிகள்

இன்றைய கட்டுமான முறை அடியோடு மாறி, நவீன கட்டுமான பொருட்கள் அதிகரித்து விட்டன. அதிக பணம் செலவு செய்து, கான்கிரீட், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி வீடுகளை கட்டும் போது மரங்களின் பயன்பாட்டை குறைத்தோம். கட்டில், பீரோக்கள் கூட இன்று மரத்தில் செய்யப்பட்டது இல்லை. எல்லாம் இரும்பு தான். நவீன கட்டுமான முறையில் பல வசதிகளை கொண்டு வந்தாலும் வெப்பம் தடுக்கும் மரங்களை மறந்தோம். ஆனால், மரத்தினாலான அந்தக் கால வீடுகளை கடக்கும் போது நாமும் இப்படி ஒரு வீடு கட்டியிருக்கலாம் என்றே பலர் நினைப்பர். அதன் தாக்கமாக தான் இன்று சிலர் மரங்களை மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

பசுமை கட்டுமான பொருட்கள்

மரத்தில் வீடு கட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டு தோட்டத்தில் மரம் வளர்த்து வெட்டாமல் அதனை சுற்றியே ஒரு மர வீடு கூட கட்டி இயற்கையை ரசிக்கலாம். இது போன்ற மர வீடுகளை கூட கட்டமைத்து தர பல பொறியாளர்கள் இருக்கிறார்கள். இதே போல் முழுவதும் மரப்பலகைகளை கொண்டு மரம் சூழ்ந்த தோட்டங்களுக்கு நடுவில் வீடு கட்டலாம்.

இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் இருந்தால் இது போன்ற பசுமை வீடுகளை நாம் கட்டலாம். இந்த பசுமை வீடுகளுக்குள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழகாக மாற்றலாம். சில நவீன வசதிகளையும் செய்து விடலாம். கூரையில் மண் டைல்ஸ் பதிக்கலாம். செடி, கொடி வளர்க்கலாம் அறைகளில் நகரும் கதவுகள் பொருத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X