கர்நாடக 'சாக்ஸபோன்' பைங்கிளி

Added : செப் 04, 2021
Share
Advertisement
''காற்றில் தான் எத்தனை இசை பிறக்கின்றன. சுவாசக்காற்றை 'சாக்ஸபோன்' கருவியில் செலுத்தி ரசிகர்களின் இசை பசிக்கு இரைபோடும் அன்னபூரணி '', கர்நாடகத்து பைங்கிளி தீக் ஷா. விபரம் அறிந்த வயதில் தான் இசை கருவிகளை மீட்ட கற்றுக்கொள்வோம். ஆனால் 4வது வயதிலேயே 'சாக்ஸபோன்' கருவியை லாவகமாக வாசிக்க துவங்கி இன்றைக்கு கர்நாடக இசை அரசியாக திகழ்கிறார். சண்டே ஸ்பெஷலுக்காக மனம்
கர்நாடக 'சாக்ஸபோன்' பைங்கிளி

''காற்றில் தான் எத்தனை இசை பிறக்கின்றன. சுவாசக்காற்றை 'சாக்ஸபோன்' கருவியில் செலுத்தி ரசிகர்களின் இசை பசிக்கு இரைபோடும் அன்னபூரணி '', கர்நாடகத்து பைங்கிளி தீக் ஷா.

விபரம் அறிந்த வயதில் தான் இசை கருவிகளை மீட்ட கற்றுக்கொள்வோம். ஆனால் 4வது வயதிலேயே 'சாக்ஸபோன்' கருவியை லாவகமாக வாசிக்க துவங்கி இன்றைக்கு கர்நாடக இசை அரசியாக திகழ்கிறார். சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்:நான் பிறந்தது உடுப்பி. பி.எட்., முடித்து 'சாக்ஸபோன்' இசை கருவியில் கர்நாடக இசை சங்கீதத்தை வாசித்து வருகிறேன். என் தந்தை சாக்ஸபோன் வித்தகர் ராகவ ஸ்ரீகர் ஆலிவூர். 17 ஆண்டுகளாக இக்கருவியை (சு)வாசிக்கிறேன்.

தியாகராஜர் கீர்த்தனைகள், பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், வர்னா மற்றும் பக்தி பாடல்களை 'சாக்ஸபோனில்' வாசித்துள்ளேன். நான் கற்றதோடு நிறுத்தி விடாமல் ஏராளமான குழந்தைகளுக்கு வாசிக்க பயிற்சி அளிக்கிறேன். இது வரை 8000 கச்சேரிகளில் இசைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளேன்.மத்திய அரசின் சிறந்த 'சாக்ஸபோனிஸ்ட்' விருது பெற்றுள்ளேன். பெங்களூரூவில் நடந்த மத நல்லிணக்க விழாவில் 'நாத வைபவா' பட்டம் பெற்றேன். கோவா அரசின் கலை, கலாசார இயக்ககம் சார்பில் நடந்த தேசிய விழாவில் பங்கேற்றுள்ளேன்.

எனது 'சாக்ஸபோன்' இசை கருவி வாசிப்பை கண்டு வியந்து 'சுவர்ண சூப்பர் ஸ்டார்' விருதினை கர்நாடக அரசு 2021 ல் அளித்தது. இது போன்று ஏராளமான விருதுகளை பெற்று வளர்ந்து வருகிறேன். திரைப்பட துறையில் கால்தடம் பதிக்கும் விதமாக தமிழ், தெலுங்கு, கன்னட பட பாடல்களை வாசித்து வருகிறேன். இசை கருவி வாசிப்பது இறைவனின் அருளை நேரடியாக பெறுவது போன்ற உணர்வை தருகிறது என்றார். இவரை பாராட்ட 78920 71557

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X