3.5 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'3.5 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி'

Added : செப் 04, 2021
Share
சென்னை:''தமிழகத்தில் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.சென்னை, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார்.அங்கு கூடியிருந்த பா.ஜ., நிர்வாகிகளிடம், ''ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் வர
 '3.5 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி'

சென்னை:''தமிழகத்தில் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார்.அங்கு கூடியிருந்த பா.ஜ., நிர்வாகிகளிடம், ''ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் வர வேண்டாம்,'' எனக் கூறி விட்டு, அவர் மட்டும் அதிகாரிகளுடன் உள்ளே சென்று ஆய்வு செய்தார்.பொதுமக்களுக்கு தடுப்பூசி எவ்வாறு போடப்படுகிறது; போதுமான தடுப்பூசிகள் உள்ளனவா என, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுதும் 65 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தேவையான அளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


சுகாதாரமில்லாத சுகாதார நிலையம்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 9:30 மணிக்கு மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி முகாமை பார்வையிட வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் முன் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அங்கிருந்த குப்பை தொட்டியில் பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் கடும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து, நேற்று காலை, மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் துாய்மை பணியாளர்கள், அவசர கதியில் மழை நீரை அகற்றி, மண் கொட்டி சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க வந்த பா.ஜ., நிர்வாகிகள், 'இப்படியா வைப்பது' என, அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவசர அவசரமாக, அமைச்சர் வருவதற்குள் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X