பொது செய்தி

தமிழ்நாடு

ஊதிய கோரிக்கை 'அம்போ' அரசு டாக்டர்கள் ஏமாற்றம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:'அரசு டாக்டர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பு, மானிய கோரிக்கையின் போது வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையின் போது பேசிய துறையின் அமைச்சர், தமிழக மருத்துவ கட்டமைப்பை

சென்னை:'அரசு டாக்டர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பு, மானிய கோரிக்கையின் போது வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையின் போது பேசிய துறையின் அமைச்சர், தமிழக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றை வரவேற்கிறோம்.ஆனால், அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் டாக்டர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தயாராக இருக்கும் அரசு, உயிர்காக்கும் டாக்டர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியத்தை தர மறுத்து வருவது வேதனை அளிக்கிறது. டாக்டர்களின் நியாயமான ஊதிய கோரிக்கையை, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஆதரித்துவிட்டு, அதை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் போது நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது.

எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் தான் தேவை. அதில் பெரும்பகுதியை காப்பீடு வாயிலாக, டாக்டர்கள் அரசுக்கு வருமானம் ஈட்டி தர முடியும். கொரோனா மூன்றாம் அலையை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில், ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுவதால் உற்சாகமாக பணியாற்ற வழிவகுக்கும். எனவே, கருணாநிதி முதல்வராக இருந்தபோது போடப்பட்ட அரசாணை, 354ன் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X