பாதாள சாக்கடை பணி ஓரிரு மாதத்தில் முடியும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பாதாள சாக்கடை பணி ஓரிரு மாதத்தில் முடியும்'

Added : செப் 04, 2021
Share
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: தி.மு.க., - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்: விருதுநகர் நகராட்சியில், 2006 கருணாநிதி ஆட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 27.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 75.22 கி.மீ.,க்கு, மூன்று சிப்பமாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள், 2011ல், 80 சதவீதம் நிறைவடைந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக 20 சதவீதப் பணிகள் நிலுவையில் உள்ளன.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தி.மு.க., - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்:

விருதுநகர் நகராட்சியில், 2006 கருணாநிதி ஆட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 27.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 75.22 கி.மீ.,க்கு, மூன்று சிப்பமாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள், 2011ல், 80 சதவீதம் நிறைவடைந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக 20 சதவீதப் பணிகள் நிலுவையில் உள்ளன. ஆனால், திட்டப் பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது. கழிவு நீர் செல்லும் வகையில் இன்னும், 4,000 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. எனவே, இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

கழிவு நீர் பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றி, கழிவு நீர் எளிதாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு:

நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 2001ல், 23.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2011ல், திருத்திய மதிப்பீடாக 27.85 கோடி ரூபாயாக மாற்றப்பட்டது. நகராட்சியின் மொத்த நீளம், 98 கி.மீ.,ரில், 74 கி.மீ.,ருக்கு பணிகள் முடிந்துள்ளன. இன்னும் கழிவு நீர் இணைப்பு வழங்காத வீடுகள், 12 ஆயிரம். இதில், 8,439 வீடுகளுக்கு தற்போது இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற வீடுகளுக்கும் வழங்க, 6.50 கோடி ரூபாய் மதிப்பில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X