அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.அதன் விபரம்:இந்திய துணி தொழில் வணிகத்தில், மூன்றில் ஒரு பங்கை தமிழகம் வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகளின் எண்ணிக்கை 1,570. இவற்றில் நுாற்கப் படும் நுால், நாட்டின் மொத்த நுாற்புத்
 பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து

சென்னை:தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதன் விபரம்:இந்திய துணி தொழில் வணிகத்தில், மூன்றில் ஒரு பங்கை தமிழகம் வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகளின் எண்ணிக்கை 1,570. இவற்றில் நுாற்கப் படும் நுால், நாட்டின் மொத்த நுாற்புத் திறனில் 45 சதவீதமாகும்.தமிழக நுாற்பாலைகளுக்கு தேவையான ௯௫ சதவீத பஞ்சு, பிற மாநிலங்களில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை சட்டப்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீது, சந்தை நுழைவு வரியாக ஒரு சதவீதம் விதிக்கப்படுகிறது. சட்டத்தின்படி, பருத்திப் பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை, வேளாண் பொருட்களாக கருதப் பட்டு, தமிழகத்தில் உள்ள சந்தைப் பகுதிகளில், கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் போது, ஒரு சதவீதம் வரி, சந்தை கட்டணமாக விதிக்கப்படுகிறது.

சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து, பஞ்சு கொள்முதல் செய்யப்படும்போது, சிறு, குறு நுாற்பாலைகள், போக்குவரத்து கட்டணம் செலுத்துவதில், பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என்பது, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கை. ஆட்சி பொறுப்பேற்றதும், நெசவாளர்களுடன் நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில், இந்த வரியை நீக்க கோரிக்கை விடுத்தனர். தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான, ஒரு சதவீதம் வரி ரத்து செய்யப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு, முதல்வர் தெரிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்று, தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, ம.தி.மு.க., - சதன் திருமலைக்குமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிந்தனைச்செல்வன், பா.ஜ., - நயினார் நாகேந்திரன், பா.ம.க., - ஜி.கே.மணி ஆகியோர் பேசினர்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், 150ம் ஆண்டு விழா தொடர்பான அறிவிப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து, அமைச்சர்கள் கீதா ஜீவன், தா.மோ.அன்பரசன், காந்தி ஆகியோரும், முதல்வருக்கு நன்றி கூறினர்.


அனுமதி மறுப்பு!

அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன் பேசுகையில், ''நெசவாளர்களுக்கு வரி தள்ளுபடி, நேரடியாக போய் சேரும் என நினைத்து நன்றி கூறுகின்றனர். வரி தள்ளுபடி யாருக்கு நேரடியாக போய் சேரும்,'' என கேட்டார். தொடர்ந்து பேச, சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து, ''சபையில், 110 விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புக்கு நன்றி தான் கூற வேண்டும்; விவாதம் கூடாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Venkatraman - chennai,இந்தியா
05-செப்-202112:28:38 IST Report Abuse
R.Venkatraman ஸ்டாலினின் நூற்றிபத்ஹு விதி லிஸ்ட் பெரிதாக வர வாய்ப்புள்ளது ஒவ்வொரு அறிவிப்புக்கு பின் நிதி ஆதரத்யும் (finance support) பதிவு செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X