பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு அர்ச்சனை புத்தகம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், 'அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்' என்ற தலைப்பில் 14 போற்றி நுால்கள் வழங்கப்பட்டன.ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 'அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்' திட்டம், முதல் கட்டமாக, 47 முதுநிலை கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், விநாயகர் போற்றி, முருகவேள் போற்றி, உமையம்மை போற்றி, நடராசர் போற்றி, தென்முக கடவுள்

எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், 'அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்' என்ற தலைப்பில் 14 போற்றி நுால்கள் வழங்கப்பட்டன.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 'அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்' திட்டம், முதல் கட்டமாக, 47 முதுநிலை கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், விநாயகர் போற்றி, முருகவேள் போற்றி, உமையம்மை போற்றி, நடராசர் போற்றி, தென்முக கடவுள் போற்றி, கோதண்டராமர் போற்றி, தாயார் போற்றி, துர்க்கையம்மன் போற்றி, காளியம்மன் போற்றி, மாரியம்மன் போற்றி, அனுமன் போற்றி, திருமால் போற்றி, நவகோள்கள் போற்றி என, 108 போற்றிகள் அடங்கிய நுால்களும், 1,008 போற்றிகள் அடங்கிய, சிவன் போற்றி நுாலும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த, 14 நுால்களும், ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையை ஒட்டி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X