அரசியல் செய்தி

தமிழ்நாடு

மானிய கோரிக்கை குறித்து பேசுங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் அறிவுரை

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:''கடந்த ஆட்சியில், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகனை, மானிய கோரிக்கை குறித்து பேசுங்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - அன்பழகன்: கும்பகோணம் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய, முதல்வருக்கு நன்றி. கும்பகோணம் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி

சென்னை:''கடந்த ஆட்சியில், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகனை, மானிய கோரிக்கை குறித்து பேசுங்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - அன்பழகன்:

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய, முதல்வருக்கு நன்றி. கும்பகோணம் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். புதிய பஸ் நிலையம், சாலை மேம்பாடு, பூங்கா மேம்பாடு, குளங்கள் துார் வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த, 10 ஆண்டுகளில், நாம் பட்ட அசிங்கம் அதிகம். அப்போது, சபையில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறேன். 'எண் கண்ணுக்கு எதிரிகளே தெரியவில்லை. எங்கே உங்கள் தளபதி, எந்த போருக்கு தலைமையேற்று நடத்தினர்' என்று கேட்டனர். எங்கள் தளபதி தமிழக படைக்கு தலைமை தாங்கி, அமைதியாக, கர்வம் இல்லாமல், அனைவரும் விரும்புகிற வகையில் அமர்ந்துள்ளார்.ஒருவர் நகைச்சுவை என்ற பெயரில், நம்மை விமர்சனம் செய்வார். நீங்கள் வேண்டுமானால், என் தொகுதியில் போட்டியிடுங்கள் என்றார். அந்த முகத்தை சபையில் காணவில்லை.

முதல்வர் ஸ்டாலின்:

ஏற்கனவே சபாநாயகர், 15 நிமிடங்கள் மட்டுமே நேரம் கொடுத்துள்ளார். எனவே, அன்பழகன் மானிய கோரிக்கைக்கு வாருங்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:

சபையில் நடந்த விஷயங்களை எம்.எல்.ஏ., எடுத்துரைத்தார். கடந்த 2017ல் சபையில் என்ன நடந்தது என்பதையும் தெரிவித்தால் நல்லது.

முதல்வர் ஸ்டாலின்:

விவாதத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக, எங்கள் உறுப்பினரை கட்டுப்படுத்தி உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர் அது குறித்து பேசலாம் என்றால், பேசுவதற்கு நாங்களும் தயாராக உள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:

அ.தி.மு.க.,வின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களோடு, நான் முதல்வராக பொறுப்பேற்றேன். கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த போது, சபையில் நடந்த நிகழ்வையும் கூற வேண்டும் என்று தான் தெரிவித்தேன். மற்றதை குறிப்பிடும் போது, இதையும் குறிப்பிடுங்கள். சபைக்கு தேவையில்லாததை பேசுவது சரியல்ல.

சபாநாயகர்:

முதல்வர் பிரச்னை தேவை இல்லை என்று தான் கூறினார். நீங்கள் நன்றி தான் கூறி இருக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

விவகாரத்திற்கு போக வேண்டாம் என்பதை நாகரீகமாக முதல்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டியதில்லை.

சபாநாயகர் அப்பாவு:

அனைவருக்கும் நன்றி. இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X