அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

Added : செப் 04, 2021
Share
Advertisement
பா.ஜ., - எம்.ஆர்.காந்தி: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, மஹாராஷ்டிரா அரசு அனுமதித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். வருமானம் அதிகம் உள்ள கோவில்கள் சார்பில், பள்ளிகள், கல்லுாரிகள் துவக்க வேண்டும். திருமண மண்டபம், மடங்கள், முதியோர் இல்லங்கள் கட்டி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஹிந்து

பா.ஜ., - எம்.ஆர்.காந்தி:

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, மஹாராஷ்டிரா அரசு அனுமதித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். வருமானம் அதிகம் உள்ள கோவில்கள் சார்பில், பள்ளிகள், கல்லுாரிகள் துவக்க வேண்டும். திருமண மண்டபம், மடங்கள், முதியோர் இல்லங்கள் கட்டி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்களில், நிறுவனங்களில், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தி, வாடகை வசூல் செய்ய வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரியில் அனைத்து கோவில்களை இணைக்கும் விதமாக, பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வேலைகளை, விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில்களில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை புனரமைக்கும் போது, ஆகம விதிப்படி, கருங்கல் கற்களால் கட்ட வேண்டும். மேற்கூரைக்கு தங்கத்தகடு வேய வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆகம விதிகளின்படி பூஜை நடப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள், பயிற்சி அளித்து வருகின்றன. தீண்டாமை பாவம் இல்லை என்றால், உலகில் வேறு எதுவும் பாவமும் இல்லை எனக்கூறி, எங்கள் அமைப்பு பணி செய்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வரவேற்றதற்கு நன்றி.

அமைச்சர் சேகர்பாபு:

ஆதிகேசவப்பெருமாள் கோவில் திருப்பணி, 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டும் என்றார். கொரோனா நோய் பரவல், ஆட்கொல்லி நோயாக உள்ளது. அவரவர் விரும்பும் கடவுளை, சுதந்திரமாக, அமைதியாக பிரார்த்தனை செய்வதில், எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று முதல்வர் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை செயலர், 'மூன்றாவது அலை வர உள்ளதால், திருவிழாக்களோ, பொது மக்கள் கூட்டம் கூடுவதையோ, அனுமதிக்கக் கூடாது' எனக்கூறி உள்ளார். நீங்கள் கூறிய கருத்துக்களை குறித்து வைத்துள்ளோம். நீங்கள் கேட்டதை எல்லாம் தரும்படி, முதல்வர் கூறி உள்ளார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


அப்பாவு பாராட்டு!

சட்டசபையில், பா.ஜ., - எம்.ஆர்.காந்தி, ''எல்லாம் வல்ல இறைவனையும், பாரத மாதாவையும், தமிழ் அன்னையையும் வணங்குகிறேன்,'' எனக்கூறி பேச்சை துவக்கினார்; முடித்ததும் நன்றி கூறி அமர்ந்தார். சில நிமிடங்களில் மீண்டும் பேச, எம்.ஆர்.காந்தி வாய்ப்பு கேட்டார். அவரிடம் சபாநாயகர், ''நீங்கள் தான் நன்றி கூறி விட்டீர்களே, பிறகு என்ன,'' என கேட்டபடியே வாய்ப்பளித்தார்.

அதைத் தொடர்ந்து, எம்.ஆர்.காந்தி, ''பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி,'' என கூறிவிட்டு, 'ஜெய்ஹிந்த்' என்றார். உடனே சபாநாயகர், 'அதை பதிய வேண்டும்... குட், குட்,'' எனக்கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X