அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளிகளில் கட்டாயமாகுமா?

Added : செப் 04, 2021
Share
Advertisement
தி.மு.க., - வேலு: தேர்தலில் தவறான பிரசாரத்தை வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளோம். 1967ல் துவங்கி இந்த தேர்தல் வரை, ஹிந்துக்களின் எதிரி எனக்கூறி பிரசாரம் செய்தனர். ஆனால், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தியாகராயநகர்,திருத்தணி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்செந்துார், பழநி, திருவாரூர் என, பெரும்பான்மையான ஆன்மிக திருத்தலங்களில், மக்கள் மிகப் பெரிய

தி.மு.க., - வேலு:

தேர்தலில் தவறான பிரசாரத்தை வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளோம். 1967ல் துவங்கி இந்த தேர்தல் வரை, ஹிந்துக்களின் எதிரி எனக்கூறி பிரசாரம் செய்தனர்.

ஆனால், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தியாகராயநகர்,திருத்தணி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்செந்துார், பழநி, திருவாரூர் என, பெரும்பான்மையான ஆன்மிக திருத்தலங்களில், மக்கள் மிகப் பெரிய வெற்றியை எங்களுக்கு தந்தனர். ஆன்மிகவாதிகளுக்கு தி.மு.க., எதிரி அல்ல என்பதை உணர்த்தி, தவறான பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. எனவே, அனைத்து பள்ளிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக்கப்பட வேண்டும்.கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும். சட்டசபை வரலாற்று சிறப்பு மிக்கது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சட்டசபை, இன்று சினிமா, 'செட்டிங்' போல அமைத்து, அதில் அமர்ந்துள்ளோம்.

கருணாநிதி தொலைநோக்கு பார்வையுடன், சட்டசபை கட்டடத்தை எழுப்பினார். ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று, மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. அதை நினைத்து, முதல்வர் யோசிக்க வேண்டாம். வேறு இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, கருணாநிதி நினைவாக, அவர் கட்டிய சட்டசபை இயங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X