பொது செய்தி

தமிழ்நாடு

மோசமான நாடகமா...

Added : செப் 04, 2021
Share
Advertisement
தமிழ் மொழி நவீனமாக வளர்ச்சி அடைய, பிற மொழி இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.இதற்கு முன், ரஷ்ய இலக்கியங்கள் அதிக அளவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. பின், இந்திய மொழிகளில், வங்காளம் மற்றும் மலையாள மொழி படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டன. ஐரோப்பிய இலக்கியங்கள் அதிகம் மொழி பெயர்க்கப்படவில்லை. 1990க்கு பின், மொழி பெயர்ப்பில் பெரிய
 மோசமான நாடகமா...

தமிழ் மொழி நவீனமாக வளர்ச்சி அடைய, பிற மொழி இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.இதற்கு முன், ரஷ்ய இலக்கியங்கள் அதிக அளவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. பின், இந்திய மொழிகளில், வங்காளம் மற்றும் மலையாள மொழி படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டன. ஐரோப்பிய இலக்கியங்கள் அதிகம் மொழி பெயர்க்கப்படவில்லை. 1990க்கு பின், மொழி பெயர்ப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்கள் மற்றும் லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் அதிகளவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, இன்றைக்கு பெரும்பாலான வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.கிரேக்க செவ்வியல் இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இது, குறையாகவே இருந்தது. அக்குறையை போக்கியவர், கோவையை சேர்ந்த அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் ஸ்டாலின்.புகழ்பெற்ற கிரேக்க படைப்பாளர்களான ஈஸ்கிலஸ், சோபக்ளிஸ், யூரிபிடிஸ் ஆகியோரின், 16 நாடகங்களையும், உலகின் முதல் காவியமான கில்கமெஷ் காவியத்தையும் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இப்போது, ஆங்கில கவிஞர் ஷெல்லியின் 'கட்டவிழ்ந்த பிரமீதியஸ்' என்ற நுாலை மொழிபெயர்த்துள்ளார்.ஸ்டாலின் கூறுகையில், ''கிரேக்க நாடக ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் ஈஸ்கிலஸ். கி.மு., 430ல் 'கட்டுண்ட பிரமித்தியஸ்' என்ற நாடகம் எழுதினார். அப்போது, மோசமான நாடகம் என விமர்சிக்கப்பட்டது. பின், மிகச்சிறப்பாக இருக்கிறது என, புகழ்ந்தனர். 2,200 ஆண்டுகளுக்கு பின், ஷெல்லி 'கட்டவிழ்ந்த பிரமீதியஸ்' என நாடகம் எழுதினார். இப்போதும் அதே விமர்சனமும், புகழும் கிடைத்தது. இந்நுாலை, தமிழ் வாசகர்களுக்கு மொழி பெயர்த்து தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X