சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'1,008 அருவா எதுக்கு?'

Added : செப் 04, 2021
Share
Advertisement
'1,008 அருவா எதுக்கு?'மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளின் உறுப்பினர்கள், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது.அதன்பின் தமிழக காங்., தலைவர் அழகிரி, நிருபர்களிடம் கூறுகையில், 'தேசிய அளவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. பா.ஜ., மக்களை பிரிக்கிறது; காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது...'
பக்க வாத்தியம்


'1,008 அருவா எதுக்கு?'



மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளின் உறுப்பினர்கள், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது.அதன்பின் தமிழக காங்., தலைவர் அழகிரி, நிருபர்களிடம் கூறுகையில், 'தேசிய அளவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. பா.ஜ., மக்களை பிரிக்கிறது; காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கட்சிக்குள்ள இருக்குற கோஷ்டிகளை கூட ஒன்றிணைக்க முடியாத காங்கிரசை பார்த்து, 'அறுக்க தெரியாதவனுக்கு 1,008 அருவா எதுக்கு'ன்னுகேட்க தோணுது...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


அந்த சட்டத்திருத்தம் யாருக்கு?



மதுரை விமான நிலையத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'போலி பத்திரங்களை, பத்திரப்பதிவு துறையே ரத்து செய்யும் அதிகாரத்தை அமல்படுத்தியுள்ளோம். முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களை போலியாக பதிவு செய்துள்ளனர் என்பதால் புதிய சட்டத் திருத்தம் கொண்டு
வரப்பட்டுள்ளது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு விவகாரம் தான், அக்கட்சி 10 ஆண்டுக்கு ஆட்சிக்கு வர முடியாமல் செஞ்சது என்பது எல்லாம் வரலாறு...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'அப்போ, தமிழக அரசின் சட்டத்திருத்தம், தி.மு.க.,வினர் யாரும் மீண்டும் நில அபகரிப்பில் ஈடுபட கூடாதுன்னு சொல்லுறதுக்கு தானா...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

பா.ஜ., அப்படி செய்யலாமா?

சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் கருங்கல்பட்டியில், 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பங்கேற்றார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'லோக்சபா தேர்தலுக்குள், பா.ஜ., வளர்ச்சி அடைந்த கட்சியாக இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு, அரசு தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம். அதற்காக எந்த வழக்கையும் சந்திப்போம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.,வினர் இப்படி அரசின் தடையை மீறுவோம் என பேசுவது சரியா... சட்டரீதியாக வழக்கு தொடுத்து அனுமதி வாங்கினால் தான், அக்கட்சிக்கு மரியாதை கிடைக்கும்...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர் ஒருவர், 'ஒரு வேளை, திராவிட கட்சிகளின் வழியில் பா.ஜ.,வை வளர்க்க நினைக்கிறாங்களோ...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X