சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எரிமலை எப்போது வெடிக்கும்?

Added : செப் 04, 2021
Share
Advertisement
எரிமலை எப்போது வெடிக்கும்?'மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டு, இப்போது பதவிக்காக நடுத்தெருவில் குழாயடி சண்டை போடுவது போல் மோதிக் கொள்கின்றனரே...' என, கேரள மாநில காங்கிரசார் மீது கடும் கோபத்தில் உள்ளார் அந்த கட்சி எம்.பி., ராகுல். இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எப்போதுமே கேரளாவில் எதிர்க்கட்சியாக இருக்கும்


அக்கம் பக்கம்


எரிமலை எப்போது வெடிக்கும்?



'மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டு, இப்போது பதவிக்காக நடுத்தெருவில் குழாயடி சண்டை போடுவது போல் மோதிக் கொள்கின்றனரே...' என, கேரள மாநில காங்கிரசார் மீது கடும் கோபத்தில் உள்ளார் அந்த கட்சி எம்.பி., ராகுல். இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எப்போதுமே கேரளாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி, அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த தேர்தலில் இது பொய்யாகி விட்டது.அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் கோஷ்டி பூசலால் இடது ஜனநாயக கூட்டணி, ஆட்சியை தக்க வைத்து விட்டது. இதையடுத்து சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்கள் சிலர் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களது ஆதரவாளர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில தலைவர் சுதாகரன் மற்றும் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு, கேரள மாநில காங்கிரசை, உண்டு இல்லை என ஆக்கி வருகின்றனர். இதைக் கேள்விப்பட்ட ராகுல், 'இந்த மாநிலத்திலிருந்து தான் நான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இப்போது நடக்கும் கூத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது. இனி கேரள காங்கிரசில் ஒரே ஒரு கோஷ்டி தான்; அது ராகுல் கோஷ்டி' என, களத்தில் இறங்கியுள்ளார்.
'எப்போது எரிமலை வெடிக்குமோ' என, கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் தொண்டர்கள்.


நிலைக்குமா பதவி?



'காமெடிக்காக கூறியதை இவ்வளவு பெரிய பிரச்னையாக்குவர் என கனவில் கூட நினைக்கவில்லை...' என, அழுது புலம்புகிறார், மத்திய பிரதேச மாநில வனத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான விஜய் ஷா. இங்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வனத் துறை அமைச்சர் விஜய் ஷா, சமீபத்தில் நர்சிங்காபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று, அங்குள்ள வசதிகள், குறைகள் குறித்து ஆய்வு செய்தார்.
வகுப்பறையில் இருந்த மாணவியை எழுப்பி, 'எல்லா வசதிகளும் உள்ளனவா' என, கேட்டார். அந்த மாணவி, 'அரசு சார்பில் தருவதாக கூறப்பட்ட இலவச சைக்கிள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை' என்றார். 'உன் பெயர் என்ன' என, அந்த மாணவியிடம் அமைச்சர் கேட்க, அந்த மாணவி, தன் பெயருடன், தன் தந்தை பெயரையும் சேர்த்துக் கூறினர். வட மாநிலங்களில் உள்ளவர்கள் தங்கள் பெயருக்கு பின், தங்கள் ஜாதி பெயரையும் இணைத்துக் கொள்வது வழக்கம்.
இதன்படி அந்த மாணவி, தன் முழுப் பெயரை கூறியதும், அருகில் இருந்த அதிகாரிகளிடம், 'இந்த சிறுமி, நம் முதல்வரின் ஜாதியைச் சேர்ந்தவர். உடனடியாக அவருக்கு வேண்டியதை செய்து கொடுங்கள்' என, உத்தரவிட்டார் அமைச்சர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதும், பலரும் அமைச்சர் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 'ஜாதி அடிப்படையில் தான் உதவி செய்வீர்களா' என, கடித்துக் குதறினர். அமைச்சரோ, 'முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்தால், இப்போது பதவியை போய் விடும் போலிருக்கிறதே' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X