கேரள விவசாயிகள் கையில் கர்நாடகா முத்திரையால் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள விவசாயிகள் கையில் கர்நாடகா முத்திரையால் சர்ச்சை

Added : செப் 04, 2021
Share
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாட்டில் இருந்து, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் விவசாயிகள் கைகளில் முத்திரை குத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட எல்லையோர பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் மைசூரு பகுதிகளில் இஞ்சி, நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து
கேரள விவசாயிகள் கையில் கர்நாடகா முத்திரையால் சர்ச்சை

பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாட்டில் இருந்து, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் விவசாயிகள் கைகளில் முத்திரை குத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட எல்லையோர பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் மைசூரு பகுதிகளில் இஞ்சி, நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விவசாயிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாவேலி சோதனை சாவடியில் வயநாடு விவசாயிகள் கைகளில் முத்திரை குத்தி, கர்நாடகாவுக்குள் அனுமதிக்கின்றனர்.

ஆர்.டி.பி.சி.ஆர்., சான்று கொண்டு சென்றாலும் அதை ஏற்காமல், கர்நாடக மாநில சுகாதார துறையினர் முத்திரை குத்தியது, கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதுகுறித்து, மானந்தவாடி எம்.எல்.ஏ., கேளு, கேரள முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பேசியதால், முத்திரை குத்தும் செயல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X