பொது செய்தி

தமிழ்நாடு

'அந்நியனாக' மாறுகிறது அரிசி தவிடு! மாத்தி யோசித்தால் எதுவும் சாத்தியமே

Added : செப் 04, 2021
Share
Advertisement
சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சித்தால் மட்டுமே சாத்தியமாகும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, பாக்குமட்டையில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்களையே பார்த்திருப்போம். கோவை இளைஞர், அரிசி தவிடு பயன்படுத்தி, டீ கப், ஸ்பூன், டிபன் பாக்ஸ், தட்டு, கண்டெய்னர் பாக்ஸ், கிண்ணம், 'யூஸ் அன் த்ரோ' பிளாஸ்க் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்துள்ளார்.மத்தம்பாளையத்தைச் சேர்ந்த
 'அந்நியனாக' மாறுகிறது அரிசி தவிடு! மாத்தி யோசித்தால் எதுவும் சாத்தியமே

சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சித்தால் மட்டுமே சாத்தியமாகும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, பாக்குமட்டையில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்களையே பார்த்திருப்போம். கோவை இளைஞர், அரிசி தவிடு பயன்படுத்தி, டீ கப், ஸ்பூன், டிபன் பாக்ஸ், தட்டு, கண்டெய்னர் பாக்ஸ், கிண்ணம், 'யூஸ் அன் த்ரோ' பிளாஸ்க் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்துள்ளார்.மத்தம்பாளையத்தைச் சேர்ந்த கல்யாண் குமாரே, அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு, வரவேற்பை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் பாக்குமட்டையில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்து வந்த இவர், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறார்.அம்முயற்சியில் உருவானதே அரிசி தவிடு டீ டம்ளர். ரசாயணம் கலக்காத இந்த டம்ளரில், டீ குடித்து விட்டு, மாட்டுத்தீவனமாக பயன்படுத்தலாம். டம்ளர் அடிப்பாகத்தில் விதை இருப்பதால், துாக்கி எறிந்தாலும், மர மாக முளைக்கும்.கல்யாண்குமார் கூறியது:பாக்கு மட்டை தொழிலை நிறைய பேர் நிறுத்தியதற்கு காரணம் மூலப்பொருட்கள் கிடைக்காததே. அரிசி தவிடு எப்போதுமே கிடைக்கக்கூடியது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத மரத்துாள், புளியங்கொட்டை துாள், கோதுமை தவிடு, நிலக்கடலை தொளியை கொண்டும் தயாரிக்க முடியும். எங்களிடம் உள்ள மெஷினில், 7 வகையான பொருட்கள் தயாரிக்க முடிகிறது.மலிவான விலையில் கிடைப்பதால், பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதே விலைக்கு, நாங்கள் தயாரிக்கும் பொருட்களையும் விற்று வருகிறோம். 60 மி.லி., டீ டம்ளர் கப் 1 ரூபாய், 120 மி.லி., கப் ரூ.1.50க்கு விற்கிறோம். அடுத்ததாக, இயற்கை பொருட்களை கொண்டு, மறுசுழற்சி பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன், என்றார் புன்னகையுடன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X