சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: எஸ்.சி., - எஸ்.டி., மக்களை வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அறிமுகமானது தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். ஆனால் இப்போது அந்த சட்டத்தை வைத்து, அப்பாவிகளை மிரட்டுகின்றனர். தி.க., அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெருக்கடிக்கு பணிந்து அந்த பிரிவுகளில், தமிழக அரசு வழக்கு தொடர்கிறது.'டவுட்'

'டவுட்' தனபாலு

ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: எஸ்.சி., - எஸ்.டி., மக்களை வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அறிமுகமானது தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். ஆனால் இப்போது அந்த சட்டத்தை வைத்து, அப்பாவிகளை மிரட்டுகின்றனர். தி.க., அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெருக்கடிக்கு பணிந்து அந்த பிரிவுகளில், தமிழக அரசு வழக்கு தொடர்கிறது.

'டவுட்' தனபாலு: அதனால் தான் சில ஆண்டுகளுக்கு முன், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயன்றது. கடும் எதிர்ப்பால் பின்வாங்கி விட்டது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தி.மு.க., அரசுக்கு வி.சி.,க்கள் மற்றும் தி.க.,வினர் அடிக்கடி நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான மத்திய அரசின் நான்கு சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்ப்பதை போலவே தொழிலாளர் சட்டங்களையும் எதிர்ப்போம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் வேகத்தைப் பார்த்தால், 'மத்திய அரசு அறிமுகப்படுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்போம்' என்பது போல உள்ளது. அந்த அளவுக்கு, மத்திய அரசு மீதான காட்டம் தென்படுகிறது. போகிற போக்கை பார்த்தால், 'எனக்கு பிடிக்காத இந்த மத்திய அரசின் லோக்சபாவில் இடம்பெற விரும்பவில்லை' எனக் கூறி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விடுவீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!


சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்:
என்னிடம் பலரும், 'நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா?' எனக் கேட்பர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்... இதுவரை நான் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டதில்லை; இனிமேலும் போடப் போவதில்லை. என்னையும் கொரோனா பாதித்துள்ளது. சிறப்பான பிற மருத்துவம் இருக்கும் நிலையில்,தடுப்பூசி தேவையற்றது.

'டவுட்' தனபாலு: மத்திய அரசுக்கு எதிரான கருத்து கொண்டவராக இருக்கலாம். அதற்காக, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தடுப்பூசியை கூட போட மாட்டேன் என சொல்வது எந்த வகையில் சேர்த்தியோ... உங்களின் கருத்தை பார்த்தால், தடுப்பூசியின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்குமோ என்ற, 'டவுட்' வருகிறது!


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்:
கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட இரண்டே நாட்களில், சில இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு என, செய்திகள் வருகின்றன. இவை, நாம் இன்னும் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞைகள்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது போல, இன்னும் கவனமாக இருந்தால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி விடலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை. இப்படித் தான், பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்த அவசரப்பட்ட கேரள மாநில அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்து நிறுத்தியுள்ளது. அது மாதிரி நிலைமை இங்கு வராமல் இருக்க வேண்டும்!


பத்திரிகை செய்தி:
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காங்., முன்னாள் தலைவர் சோனியா, வரும் 20 - 30 வரை நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இப்போது, தேசிய பிரச்னைகளில் நீடித்த போராட்டத்தை நடத்த திட்டமிடுவதற்காக, திக்விஜய் சிங் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார்.

'டவுட்' தனபாலு: மொத்தத்தில் அடுத்த லோக்சபா தேர்தல் வரை, நாட்டை குட்டிச்சுவராக்க, சோனியா திட்டமிட்டுள்ளார் என்பது, 'டவுட்' இன்றி தெரிகிறது. எதிர்க்கட்சி அரசியலால் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் அசாதாரண சூழலால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுமே என்று இவர்கள் கவலையே பட மாட்டார்களோ!

முதல்வர் ஸ்டாலின்: திராவிடன் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழன் அரசியல் செய்ய முடியாது. தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்தி தாசர் பண்டிதர். திருக்குறளுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். அவரின் வழிகாட்டுதல் படி தான் இந்த அரசு செயல்படுகிறது.

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கும் மேலாகிறது. நேற்று முன்தினம் மட்டும் தான், அயோத்திதாசர் என்ற பெயரையே இந்த அரசு உச்சரித்துள்ளது. ஆனால், கருணாநிதி, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெயரை பல முறை, ஏன் மூச்சுக்கு முன்னுாறு முறை கூறியுள்ளது. எனவே, அயோத்திதாசரை வாழ்த்தி முதல்வர் பேசியது, சபை அலங்கார வார்த்தைகள் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
05-செப்-202119:42:28 IST Report Abuse
Anantharaman Srinivasan அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெயர்கள் தெரிந்தவை. எனவே பல முறை சொல்லி அரசியல் செய்கிறார்.அயோத்திதாசரை பற்றி என்னதெரியும். வாழ்த்தி பேசியது யாரோ எடுத்துசொல்லிய பிறகே இருக்கும் ..
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
05-செப்-202109:52:33 IST Report Abuse
Raj எதிர் கட்சிகள் பெகசிஸ் பற்றி பாராளுமன்ற சுட்ட தொடருக்கு பின்னால் பேசாது. அது ஒரு திட்டமிட்ட நாடகம். இதற்கு காரணமானவர்களை மக்கள் தேர்தலில் கவணிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X