அரசியல் செய்தி

தமிழ்நாடு

17 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி மத்திய அரசிடம் அனுமதி கேட்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:''கல்லுாரிகளில் படிக்கும் 17 வயது மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கிண்டி மடுவாங்கரையில், குடிநீர் வழங்கல் துறையின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:இந்தியாவிலேயே

சென்னை:''கல்லுாரிகளில் படிக்கும் 17 வயது மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கிண்டி மடுவாங்கரையில், குடிநீர் வழங்கல் துறையின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:இந்தியாவிலேயே முன்னோடியாக மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 25 நீர்நிலைகள், 200 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப் பட்டு வருகின்றன.

சென்னையில் 10.94 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. அதில், 8.24 லட்சம் குடியிருப்புகளுக்கு, தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்புமீதமுள்ள இரண்டு லட்சம் குடியிருப்புகளுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கையால், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நகராக சென்னை மாறும்.

பள்ளிகள் திறந்தவுடன் தான், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான், தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா எல்லை பகுதியில் இருப்பதால், கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளது. கேரளா எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய ஒன்பது மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, ஒன்பது மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி போடுவதற்கானஇலக்கை அடைய, கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம்.


ஆலோசனை

இந்தியாவில் எந்த இடத்திலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கப்படவில்லை. கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான 17, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசிடம் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X