பொது செய்தி

தமிழ்நாடு

'கள்ளுக்கான தடையை முதல்வர் நீக்குவார்'

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை: ''கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை, முதல்வர் ஸ்டாலின் நீக்குவார் என்று நம்புகிறோம்,'' என, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. அதேபோல், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து,

கோவை: ''கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை, முதல்வர் ஸ்டாலின் நீக்குவார் என்று நம்புகிறோம்,'' என, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. அதேபோல், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து, கள் இறக்கியோர் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை, முதல்வர் ஸ்டாலின் நீக்குவார் என நம்புகிறோம்.

அப்படி அறிவிக்கவில்லையேல் வரும், 2022 ஜன., மாதம் சென்னையில் 'அஸ்வமேத' யாகம் நடத்தப்படும்.காவிரியில் இருந்து தினமும் நீர் பங்கீடு என்றிருந்தால் தான் இரு மாநில பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளாட்சி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தான் நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X