பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 1,200 புறநோயாளிகள் சிகிச்சை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பொது மருத்துவம், சுவாசம் மற்றும் நுரையீரல், தோல், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மகப்பேறு, அறுவை சிகிச்சை பிரிவு, சர்க்கரைவியல் உள்ளிட்ட, 40 துறைகள் உள்ளன.கொரோனா தொற்று பரவியபோது, மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்ததால், இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு மீண்டும் அனைத்து வித சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும்,

கோவை;கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பொது மருத்துவம், சுவாசம் மற்றும் நுரையீரல், தோல், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மகப்பேறு, அறுவை சிகிச்சை பிரிவு, சர்க்கரைவியல் உள்ளிட்ட, 40 துறைகள் உள்ளன.கொரோனா தொற்று பரவியபோது, மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்ததால், இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு மீண்டும் அனைத்து வித சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும், 1,200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறுகையில், ''மருத்துவமனையில், 1,080 படுக்கைகள் உள்ளன. 630 படுக்கைகள் கொரோனா நோயாளிகள், 450 படுக்கைகள் இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினமும், 1,200 வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இருதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகள், இங்கு அளிக்கப்படுவதில்லை. நோயாளிகளின் விருப்பத்துக்கேற்ப, இ.எஸ்.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவமனைகளில், இச்சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X