சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

விதிகளை மீறி பூமி தான நிலம் விற்பனை!

Added : செப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
விதிகளை மீறி பூமி தான நிலம் விற்பனை!''கோவை மண்டலமே கேரள மாநிலத்துல இருக்குறது போல இருக்காம் பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''ஏன் அப்படி தோணுதுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''கொங்கு மண்டலத்துல இருக்குற கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் எல்லாருமே கேரளாவைசேர்ந்தவங்க பா...''இப்படி ஒட்டுமொத்தமாக கேரளாவை

 டீ கடை பெஞ்ச்


விதிகளை மீறி பூமி தான நிலம் விற்பனை!


''கோவை மண்டலமே கேரள மாநிலத்துல இருக்குறது போல இருக்காம் பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''ஏன் அப்படி தோணுதுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''கொங்கு மண்டலத்துல இருக்குற கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் எல்லாருமே கேரளாவை
சேர்ந்தவங்க பா...

''இப்படி ஒட்டுமொத்தமாக கேரளாவை சேர்ந்தவங்க தான், கோவை மண்டலத்தை நிர்வாகம் பண்ணுறாங்க... அவங்க யாருமே எங்களை மதிக்கிறதே இல்லைன்னு, ஆளுங்கட்சிக்காரங்க புலம்புறாங்க பா...

''உள்ளூர் அமைச்சர்கள் ரெண்டு பேர், முன்னாள் பிரதமரின் பெயர் உள்ள சீனியர் அமைச்சரிடம் இது பத்தி சொல்லியிருக்காங்க... 'நான் சொன்னா கேட்குற நிலையில தலைவர் இல்லை'ன்னு அவர் கையை விரிச்சிட்டாராம் பா...'' என முடித்தார் அன்வர்பாய்

''கிலியில இருக்காவ வே...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''யார், என்ன தப்பு செஞ்சா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படுற ரேஷன் கடைகள்ல விற்பனையாளர், எடையாளர் பதவிகளுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வழியா, முந்தைய ஆட்சியில ஆட்களை தேர்வு செய்ய முடிவு
செஞ்சாவ வே...

''ஆள்சேர்ப்பு நிலையத்துல இருக்குற சில அதிகாரிகள் ஒரு பதவிக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வசூலிச்சுருக்காவ... அதுல 3 லட்சம் ரூபாயை அரசியல்வாதிகளிடம் கொடுத்துட்டு, மீதி தொகையை அவங்களே பங்கு போட்டுகிட்டாவ வே...

''தேர்தல் வந்ததால வேலைக்கு தேர்வானவ பட்டியல் வெளியிடுறதை ஒத்தி வைச்சாவ... இந்நிலையில ஆட்சி மாறி, தி.மு.க., அரசு வந்துருச்சு வே...

''இதையடுத்து, ரேஷன் ஊழியர் நியமனம் தொடர்பா ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செஞ்சு, புதுசா ஆட்களை தேர்வு செய்ய போறதா, தமிழக அரசு அறிவிச்சு இருக்கு வே...

''இதனால, வேலைக்கு பணம் கொடுத்த எல்லாரும் திருப்பி கேட்க ஆரம்பிச்சிட்டாவ... விஷயம் வெளியே வந்தா வேலைக்கு, 'ஆப்பு' வைச்சிடுவாங்கன்னு, பணம் வாங்கிய அதிகாரிகள் கிலியில இருக்காவ வே...'' என, விளக்கினார் அண்ணாச்சி.
தொண்டையை செருமியபடி, ''காந்தியின் சீடர் ஆச்சார்ய வினோபா பாவே முயற்சியில உருவானது தான் பூமி தான இயக்கம்...

''இதுல பெரும் நிலக்கிழார்கள், தங்களோட நிலங்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தாங்க...'' என, வரலாற்று சம்பவத்தை நினைவுபடுத்திய அந்தோணிசாமியே மேலும் தொடர்ந்தார்...

''அந்த நிலங்களை நிர்வகிக்க, தமிழகத்துல பூமி தான வாரியத்தை உருவாக்கி இருக்காங்க... விதிப்படி இந்த நிலங்களை வேறு யாருக்கும் விற்கக் கூடாதுங்க...

''ஆனா, கோவை மலுமிச்சம்பட்டியில இருக்குற 120 ஏக்கர் பூமி தான நிலத்தை, கட்டுமான நிறுவனம் ஒண்ணுக்கு கடந்த ஆட்சியில வித்துருக்காங்க...

''அப்ப, வாரிய இயக்குனரா இருந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுக்கு மறுப்பு தெரிவிச்சு இருக்காங்க... ஆனாலும், வாரியத்துல தீர்மானம் நிறைவேற்றி அடிமாட்டு விலைக்கு வித்துட்டாங்க...

''இந்த நிலத்தை விற்றதுல, 'மாஜி' அமைச்சர் ஒருவருக்கு மிகப்பெரிய தொகை கை மாறி இருக்கு... அந்த விஷயம் கசிய ஆரம்பிச்சுருக்கு... விரைவில் பூதம் வெளியே வரும்னு பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அப்போது கடைக்கு வந்த நபரிடம், ''வாங்கோ வேலு, மணி என்னாச்சு... இவ்வளவு, 'லேட்'டா வாரீர்...'' என குப்பண்ணா நலம் விசாரிக்க, நண்பர்கள்
கிளம்பினர்.


அரசு பள்ளிகளுக்கு தரமற்ற பொருட்கள் சப்ளை!''உப்பு தின்னா தண்ணி குடிக்கணும்... தப்பு செஞ்சா பயப்படணுமுல்லா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன ஓய்... பீடிகை எல்லாம் பலமா இருக்கு...'' என்றார் குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில, 30 வருஷத்துக்கும் மேலா இயங்கிட்டு இருந்த பால் குளிரூட்டும் நிலையம், பால் வரத்து குறைஞ்சதால மூடப்
பட்டது...

''அரை ஏக்கர்ல இருந்த இந்த வளாகத்தை, சிறுவர் பூங்காவா மாத்தி, பார்க்கிங் வசதியோட, 'ஹைடெக் பார்லர்' அமைக்க, ஆவின் நிர்வாகம், 2017ல 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குச்சு வே...

''இதன்படி, பார்லர் மட்டும் திறந்தாவ... ஆனா, எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாம, ஒதுக்குன நிதியை சிலர், தனியா ஒதுக்கிட்டாவ... இப்ப, இது சம்பந்தமான ரிக்கார்டுகளை துாசு தட்டி எடுத்துட்டு இருக்கிறதால, முறைகேடு புள்ளிகள் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''யார் செல்வாக்குல இருக்கார்னு தெரியலை பா...'' என அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், ஓமலுார்ல, பஞ்சாயத்து ராஜ் திட்ட உயர் அதிகாரியா இருக்கிறவரை, சமீபத்துல, வேதாரண்யம் உபகோட்டத்துக்கு மாத்தினாங்க பா...

''அதிகாரிக்கு அங்க போக விருப்பம் இல்லை... அதனால, ஓமலுார்லயே பணியில தொடர்ந்துட்டு இருக்கார்... இதை, மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கலை பா...

''அதிகாரி, யார் தயவுல இங்கயே நீடிக்கிறார்னு தெரியாம, கீழ்மட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வியப்புல இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''யோகராஜ்... இங்க உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே, ''தரமில்லாத பொருட்களை வச்சு என்ன செய்றதுன்னு தலைமை ஆசிரியர்கள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''அவங்களுக்கு என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல அரசு பள்ளிகள்ல, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்துல, வருஷா வருஷம் ஒரு தொகை வழங்குவா...

''அதிகபட்சம், 75 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கப்படும். இந்த தொகையில இருந்து, கற்பித்தல் பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வாங்க பயன்படுத்திக்கலாம் ஓய்...

''அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை குழு வாயிலா தான் இந்த பொருட்களை வாங்கணும்... திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள்ல, அரசியல் கட்சியை மையமாகக் கொண்டு செயல்படும் சில தனியார் நிறுவனங்களே, பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை 'சப்ளை' செய்திருக்கு ஓய்...

''அதுலயும், போன வருஷம் கொரோனாவால பள்ளிகள் மூடி கிடந்த நேரத்துல, 'சானிடைசர், தெர்மல் ஸ்கேனர்' மாதிரி தடுப்பு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், நுாலக புத்தகங்களை வினியோகம் செய்திருக்கா... இப்ப, பள்ளிகள் திறந்துட்டதால, இந்த பொருட்கள் எல்லாம் பயன்படுத்த முடியாதபடிக்கு தரமில்லாம இருக்கு ஓய்...

''இதுல என்ன வேடிக்கைன்னா, இந்த வருஷமும் அதே மாதிரி தரமில்லாத பொருட்களை தலையில கட்ட, தனியார் நிறுவனங்கள் முயற்சி பண்றது... புது அரசு, இந்த விஷயத்துல விழிப்பா இருக்கணும்னு, தலைமை ஆசிரியர்கள் சொல்றா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-செப்-202115:41:39 IST Report Abuse
D.Ambujavalli இன்னும் எத்தனை முறைகேடுகளில் மாற்றினாலும், வெகு சுலபமாக அந்த,'மணி ' தப்பிவிடும். வாங்கத் தெரிந்தவருக்கு, எங்கு, எப்படிக் 'கொடுத்து' தப்பிக்கலாம் என்பது தெரியாதா ?
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
05-செப்-202108:54:56 IST Report Abuse
PKN முந்தைய ஆட்சியில் ரேஷன் கடைக்கு தேர்வானவர்கள் லிஸ்ட்டை ரத்து செய்தது நல்ல உதாரனம். பணம் வாங்கியவர்கள் இப்ப திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி இருப்பார்கள். பணம் கொடுத்தவர்கள் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். அப்பதான் இனி தைரியமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அடங்குவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X