பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 04, 2021
Share
Advertisement
செப்., 5, 1872துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப் பிடாரத்தில் 1872 செப்., 5ம் தேதி பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. பிரபல வழக்கறிஞராக பணியாற்றியவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். பல ஆங்கில நுால்களை தமிழில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து பல செய்யுள்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.துாத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண்

இதே நாளில் அன்று

செப்., 5, 1872

துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப் பிடாரத்தில் 1872 செப்., 5ம் தேதி பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. பிரபல வழக்கறிஞராக பணியாற்றியவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். பல ஆங்கில நுால்களை தமிழில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து பல செய்யுள்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.துாத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை துவக்கினார். ஆங்கிலேயருக்கு எதிராக, 'சுதேசி நாவாய் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இதனால், 'கப்பலோட்டிய
தமிழன்' என போற்றப்பட்டார்.தொழிலாளர்களின் உரிமைகளை காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடினார். இவரை கைது செய்ததால், தமிழகம் முழுதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆங்கிலேய அரசு, கோவை சிறையில் செக்கு இழுக்க வைத்து, சித்திரவதை செய்தது. நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தார். 1936 நவ., 18ம் தேதி தன் 64வது வயதில் காலமானார்.
தியாகி வ.உ.சி., பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X