அரசியல் செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகங்களில் தங்குமிடம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:புலிகள் காப்பகங்களில், வனப் பணியாளர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்க, 6 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.வனத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு: தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இங்கு, புலிகள் மற்றும் பிற விலங்கினங்கள் வேட்டையாடப் படுவதை தடுக்க வனப் பணியாளர்கள்

சென்னை:புலிகள் காப்பகங்களில், வனப் பணியாளர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்க, 6 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

வனத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு: தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இங்கு, புலிகள் மற்றும் பிற விலங்கினங்கள் வேட்டையாடப் படுவதை தடுக்க வனப் பணியாளர்கள் உள்ளனர்.

வனப்பணியாளர், வேட்டை தடுப்பு காவலர்கள், சுழற்சி முறையில் புலிகள் காப்பகங்களில் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி 1,100 வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.இவர்களுக்காக வனப் பகுதிகளில் உணவகம், ஓய்விடம், சூரியசக்தி மின்சார வசதியுடன் கூடிய தங்குமிடங்கள் கட்டப்பட உள்ளன.இதற்கு, 6 கோடி ரூபாய் ஒதுக்க அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

தற்போது, ஐந்தாவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்துார் - மேகமலையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.மேகமலையில் மேம்பாட்டு பணிகளுக்காக, மத்திய அரசிடம் இருந்து 5.22 கோடி ரூபாய் பெற, வரைவு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X