பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... நாவல் கரை சோலையில்சொட்டு நீர் பாசன வசதி

Added : செப் 04, 2021
Share
Advertisement
நம்ம நவக்கரை குழுமம், மாவுத்தம்பதி ஊராட்சி இணைந்து, 5 ஏக்கர் பரப்பளவில், நாட்டு மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நட்டு, நாவல் கரை சோலை உருவாக்கியுள்ளன. இதில், சொட்டுநீர் பாசன வசதி, நீர் நிலை அமைத்தல் மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளுக்கு, கோவை ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப் நிதியுதவி வழங்குகிறது.இவ்விழாவில், மாவுத்தம்பதி ஊராட்சி தலைவி கோமதி, நம்ம நவக்கரை குழும தலைவர்

நம்ம நவக்கரை குழுமம், மாவுத்தம்பதி ஊராட்சி இணைந்து, 5 ஏக்கர் பரப்பளவில், நாட்டு மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நட்டு, நாவல் கரை சோலை உருவாக்கியுள்ளன. இதில், சொட்டுநீர் பாசன வசதி, நீர் நிலை அமைத்தல் மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளுக்கு, கோவை ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப் நிதியுதவி வழங்குகிறது.

இவ்விழாவில், மாவுத்தம்பதி ஊராட்சி தலைவி கோமதி, நம்ம நவக்கரை குழும தலைவர் மகேஷ் தலைமை வகித்தனர். ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப் தலைவர் பாவிக் முமாயா, செயலாளர் முரளி பாலகிருஷ்ணன், சமுதாய சேர்மன் சம்பத்குமார், பொருளாளர் அம்ரீஸ், நம்ம நவக்கரை குழும நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மொழிப்போர் தியாகிக்கு மலரஞ்சலி

தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகி சண்முக சுந்தரத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. டான்போஸ்கோ அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு, உணவு வழங்கப்பட்டது. மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், சண்முகசுந்தரத்தின படத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள், மலர் தூவி மரியாதை செய்தனர்.

பூலித்தேவன்பிறந்த நாள் விழா

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன், 306வது பிறந்த நாள் விழா, முக்குலத்தோர் புலிப்படை சார்பில், சிந்தாமணி புதுாரில் நடந்தது; மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமை வகித்தார்.புலித்தேவன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. தேவர் நல்வாழ்வு மன்ற தலைவர் சிவலிங்கம், பூலித்தேவனை பற்றி பேசினார். பங்கேற்றவர்களுக்கு பூலித்தேவனின் வரலாற்று நுால் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்குஇதோ அழைப்பு

தோட்டப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுவித்துள்ளது. அத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது:தோட்டக்கலை பயிர்களுக்கு இந்தாண்டுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டர், (2.5 ஏக்கருக்கு) செலுத்த வேண்டிய பிரீமிய தொகை கத்தரிக்கு, 2,742 ரூபாய், வெங்காயத்துக்கு, 5,218 ரூபாய், தக்காளிக்கு, 3,501 ரூபாய், வாழைக்கு, 11 ஆயிரத்து, 465 ரூபாய், மரவள்ளிக்கு, 4,026 ரூபாய், மஞ்சளுக்கு, 9,940 ரூபாய்.வரும், 15க்கு முன், பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும். இதுசம்பந்தமாக, விவசாயிகள் கூட்டுறவு கடன் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

சங்கரா கல்லுாரியில் 'தீக்சாரம்பம்' நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரியில், நுண் கலை மன்றம் சார்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, 'தீக்சாரம்பம்' என்ற பெயரில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி 'ஆன்-லைனில்' நடந்தது.ஒருங்கிணைப்பாளர் தீபா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராதிகா தலைமை வகித்தார். சீனியர் மாணவர்கள், இசை, நடனம், பாடல், மிமிக்ரி, யோகா, இசை கருவிகள், கவிதைவாசித்து, ஜூனியர் மாணவர்களை வரவேற்றனர்.கல்லுாரியில் உள்ள மன்றங்கள், கல்லுாரி சூழல், பிற செயல்பாடுகள் குறித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்டு, பேராசிரியர்கள் பவித்ரா, தியாகராஜன், ஜெயராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அன்னுாரில் இன்றுஇலவச கண் சிகிச்சை
கோவை சங்கரா கண் மருத்துவமனை, போத்தனுார் அன்னை தெரசா அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், அன்னுார் தெற்கு துவக்கப்பள்ளியில், இன்று காலை, 9:00 முதல் மதியம், 1:00 வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. கண் தொடர்பான நோய்களுக்கு இலவச ஆலோசனை அளிக்கப்படும். தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை செய்து, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கான்கிரீட் சாலைக்குரூ.10 லட்சம் ஒதுக்கீடு
காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, சாலையூரில், 200 மீட்டர் துாரத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது, ஒன்றிய தலைவர் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் தங்கராஜ், கவுன்சிலர்கள் ஜெயபால், சுமதி பங்கேற்றனர்.

பூபேஷ் குப்தா படிப்பகம்40ம் ஆண்டு நிறைவு விழா
பூபேஷ் குப்தா நினைவு படிப்பக, 40ம் ஆண்டு நிறைவு விழா, கோவை விஸ்வகர்மா மண்டபத்தில் நடந்தது.இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித் பேசுகையில், ''கோவையில் பல தியாகிகள் வாழ்ந்துள்ளனர். சின்னியம்பாளையம் தியாகிகளின் தியாகம் பலருக்கும் உந்து சக்தியாக இருந்துள்ளது. சமூகத்தில் சிந்தனை மாற்றம் உருவாக்க, இதுபோன்ற படிப்பகங்கள் அவசியம்,'' என்றார்.
இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சுந்தரம், பொருளாளர் சுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வக்கீல் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரியில்தொழில்நுட்ப கருத்தரங்குஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணினி சார்ந்த துறைகள் இணைந்து கணினித்துறையில் உள்ள அறிவுத்திறன் தலைப்பில் கருத்தரங்கு நடத்தின; நிர்வாக அறங்காவலர் மலர்விழி துவக்கி வைத்தார்.

பிலிபைன்ஸ் பெர்பெட்ஸவல் ஹெல்ப் சிஸ்டம் பல்கலை டீன் ரெக்ளோஸ் ஆர்குவல்ஸ் கூறுகையில்,''தொழிற்சாலைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். செயற்கை அறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் ஆச்சரியமூட்டும் பல கண்டுபிடிப்புகள் வர உள்ளன,'' என்றார்.சமர்ப்பிக்கப்பட்ட, 234 ஆராய்ச்சி கட்டுரைகளில், சிறந்தவை தேர்வு செய்து, பரிசு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய தொழில்நுட்ப பல்கலை ஆராய்ச்சியாளர் சித்தல பிரசாத், ஈராக் குபாநஜல் பல்கலை அஹமத் ஒபைட், கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் பங்கேற்றனர்.

காளப்பட்டியில்புறா பந்தயம்

இளைஞர்கள் மன்றம் சார்பில், காளப்பட்டியில் புறா பந்தயம் நடந்தது; கோவை மாநகர் மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் துவக்கி வைத்தார். 24 புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதிக நேரம் பறந்த புறா தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு கோப்பை, பரிசு வழங்கப்பட்டன.முதல் பரிசாக, 12 அடி உயர கோப்பை, ஊக்கத்தொகை கோபால் பெற்றார். இரண்டாமிடம் பிடித்த சூர்யாவுக்கு 4 அடி கோப்பை, பரிசு, மூன்றாமிடம் பெற்ற செல்வகுமாருக்கு 3 அடி உயர கோப்பை வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்குமூன்று சக்கர வாகனம்
ஒய்ஸ்மென் கிளப் சார்பில், ரூ.3.5 லட்சம் மதிப்பில், மாற்றுத்திறனாளிகள் நான்கு பேருக்கு, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை கேரளா கிளப்பில் நடந்தது. ஒய்ஸ்மென் கிளப் மேற்கு மாவட்ட கவர்னர் விஜயராணி, சிங்காநல்லுார் முன்னாள் எம்.எல்.ஏ.,கார்த்திக், திட்ட இயக்குனர் செல்வக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X