சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எந்த சூழலையும் வெற்றிகரமாக சமாளிக்கணும்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
எந்த சூழ்நிலையையும் கையாளும் திறன் அனைவருக்கும் அவசியம் என கூறும் சுவாமி சுகபோதானந்தா: எந்த பள்ளிக் கூடங்களும் சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என கற்றுத் தருவது இல்லை. வாழ்க்கை அனுபவத்தால் சிலர் கற்றுக் கொள்கின்றனர். இன்னும் சிலர், வாழ்க்கை முழுவதும் அதை கற்காமல் போராடிக் கொண்டே இருக்கின்றனர். வித்தியாசமான சூழ்நிலைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் வந்து கொண்டே தான்
சொல்கிறார்கள்

எந்த சூழ்நிலையையும் கையாளும் திறன் அனைவருக்கும் அவசியம் என கூறும் சுவாமி சுகபோதானந்தா: எந்த பள்ளிக் கூடங்களும் சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என கற்றுத் தருவது இல்லை. வாழ்க்கை அனுபவத்தால் சிலர் கற்றுக் கொள்கின்றனர். இன்னும் சிலர், வாழ்க்கை முழுவதும் அதை கற்காமல் போராடிக் கொண்டே இருக்கின்றனர். வித்தியாசமான சூழ்நிலைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் வந்து கொண்டே தான் இருக்கும். அதை எப்படி பக்குவமாக எதிர்கொள்கிறோம் என்பது தான், நாம் யார், நாம் இந்த நிலையில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறது.நம் வீட்டு விசேஷத்திற்கு உறவினர்கள் பலரும் வந்த வண்ணமாக உள்ளனர். ஒரு உறவினரை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். அப்போது இன்னொரு உறவினர் வருகிறார்; அவரையும் வரவேற்க வேண்டும். ஏற்கனவே வரவேற்பில் இருக்கும் உறவினரை துண்டித்து விட்டு, வரும் உறவினருடன் பேச முடியாது.இது ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை. அந்த நேரத்தையும் தனக்குரியதாக ஆக்கிக் கொள்பவர் தான் விபரமான ஆள். ஏற்கனவே வரவேற்றுக் கொண்டிருக்கும் உறவினரிடம் அனுமதி வாங்கி, உள்ளே வந்து விட்ட இன்னொரு உறவினரை வரவேற்று, இரு உறவினர்களையும் நெருக்கமாக நிறுத்தி வைத்து, இருவரையும் பேச வைத்து விட்டு, மூன்றாவது உறவினரை வரவேற்க செல்பவர் தான் புத்திசாலி; சூழ்நிலையை சரியாக கையாளுபவர்.பரபரப்பான வேலை நாள்; தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒன்றால், அருகில் இருக்கும் 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு நீங்கள் செல்கிறீர்கள். உங்களுடன் பணியாற்றும் அல்லது பதவியில் உங்களுக்கு கீழே இருக்கும் ஒரு நபரும் அந்த நேரத்தில் அந்த ஷாப்பிங் மாலுக்கு வந்து விடுகிறார்.இந்த நேரத்தில், 'அலுவலகத்தை விட்டு உங்களால் எப்படி இப்படி வந்து ஷாப்பிங் செய்ய முடிகிறது; உங்களைப் போன்றவர்களால் தான் நிறுவனம் வளரவே மாட்டேன் என்கிறது' என, எரிந்து விழுபவர், விபரம் தெரியாத நபர். அவருக்கு அந்த சூழ்நிலையை கையாளத் தெரியவில்லை.மாறாக, எந்த சூழ்நிலையையும் வெற்றிகரமான சூழலாக மாற்றக் கூடியவர் நீங்கள் என்றால், இதுபோன்ற சூழ்நிலையில், ஷாப்பிங் மாலில் சந்தித்த சகஊழியரிடம், 'நீங்களும் 'லேப்டாப்'புடன் இங்கு வந்து தான் வேலை செய்கிறீர்களா. 'ஏதேனும் அவசர வேலையாக வந்து விட்டீர்கள் போலிருக்கிறது' என்று கேட்டு, எதிரே வந்த சகஊழியரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்க மாட்டார்.இது தான் சூழ்நிலையை கையாளும் நேர்த்தி. சவாலான ஒரு சூழல் வரும் போது, நீங்கள் சிறந்த மனிதராக கருதும் ஒருவர், அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பாரோ அப்படி நாமும் சமாளிக்க வேண்டும் என நினையுங்கள். உங்களால் எந்த சூழலையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும்!


பதிவாளரிடம் அடமான கடனைபதிவு செய்யணும்!



வீடுகள், மனைகளை அடமானமாக வைத்து சொத்துக்களை வாங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார், 'பெஸ்ட் சர்வீஸ் ரியாலிட்டி டாட் இன்' என்ற நிதி இணையதளத்தின் நிறுவனர் சிவகுமார்: சொத்துக்களை அடமானமாக வைத்து நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும். இதற்காக அந்த வீடு அல்லது சொத்தின் உண்மை பத்திரங்களை வங்கிகளில் கொடுத்து, அதன் மேல் கடன் வழங்குகின்றனர். வீடு, கட்டடம், மனை போன்றவற்றை சொந்தமாக வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இந்த கடனை வாங்க முடியும். இதற்கான வட்டி, கடன் வழங்கும் நிறுவனத்தை பொறுத்து, 9.8 சதவீதத்திலிருந்து, 16 சதவீதம் வரை உள்ளது.'சிபில்' கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் எளிதாக கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த ஸ்கோர் அதை விட அதிகமாக இருந்தால், வட்டி வீதத்தில் பேரம் பேசலாம்.தனிநபர் கடன்களை, 3 - 5 ஆண்டுகளில் செலுத்தி முடிக்க வேண்டும். வீட்டு அடமானக் கடனை அதிகபட்சம் 15 - 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம்.
மாதாந்திர தவணையாகவும் கடனை திருப்பி செலுத்தலாம். அதற்கு ஒரு வட்டி இருக்கும். கடன் தொகையை பகுதியாகவோ, முழுமையாகவோ முன்கூட்டியே செலுத்தி முடித்துக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்துடன் கடன் பெறுபவரின் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி செலுத்தியதற்கான தாக்கல் அறிக்கை, வங்கி சேமிப்பு கணக்கின் ஆறு மாத அறிக்கை, பொறியாளரிடம் இருந்து பெறப்பட்ட கட்டட மதிப்பு அறிக்கை, வழக்கறிஞரிடம் பெறப்பட்ட சட்டக் கருத்துரு போன்றவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.வங்கியின் பொறியாளர்கள் வீட்டுக்கு வந்து கட்டடம் அல்லது சொத்தை மதிப்பீடு செய்து அறிக்கை அளித்த பின், எல்லாம் சரியாக இருக்கிறது என கருதும் பட்சத்தில், பணம் மொத்தமாக, கடன் பெறுபவரின் வங்கிக் கணக்குக்கு வரும்.வீட்டு அடமானக் கடன் பெற்ற விபரத்தை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கான செலவை கடன் பெறுபவர் தான் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுபோக, பரிசீலனைக் கட்டணம் என்ற வகையில் குறிப்பிட்ட தொகையை கடன் பெறுபவர் செலுத்த வேண்டியிருக்கும்.ஒரு நிதி நிறுவனத்தில் வாங்கிய சொத்து அடமானக் கடனை, மற்றொரு வங்கிக்கு எளிதில் மாற்றிக் கொள்ளலாம். அதுபோல, ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், வாரிசுகளின் உயர் கல்வி, குடும்ப சுற்றுலா போன்றவற்றிற்காக, 'டாட்-அப்' கடன் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எவ்வளவு சதவீத வட்டி என்பதை அறிந்து வாங்குவது நல்லது! இ - மெயில்: www.bestservicerealty.in போன்: 99400 27179


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X