தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு: சட்டசபையில் சிரிப்பலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு: சட்டசபையில் சிரிப்பலை

Added : செப் 04, 2021
Share
''ஏன் தலைவா, தி.மு.க., என்றால் மட்டும், 'பெல்' அடிக்கிறீர்கள்,'' என, துணை சபாநாயகரிடம், தி.மு.க., - எம்.எல்.ஏ., கேட்டதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.தி.மு.க., - தியாகராஜன்: கடந்த காலங்களில், கால்வாய்களில் நேரடியாக நீர் எடுத்து குடிப்பர். தற்போது கழிவுகள் கலப்பதால், நீர் முழுமையாக மாசடைந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிப்படைகிறது. கடந்த, 1890 முதல் 2002

''ஏன் தலைவா, தி.மு.க., என்றால் மட்டும், 'பெல்' அடிக்கிறீர்கள்,'' என, துணை சபாநாயகரிடம், தி.மு.க., - எம்.எல்.ஏ., கேட்டதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.

தி.மு.க., - தியாகராஜன்:

கடந்த காலங்களில், கால்வாய்களில் நேரடியாக நீர் எடுத்து குடிப்பர். தற்போது கழிவுகள் கலப்பதால், நீர் முழுமையாக மாசடைந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிப்படைகிறது.

கடந்த, 1890 முதல் 2002 வரை தமிழகத்தை 54 புயல்கள் தாக்கியுள்ளன. 2002 முதல் 2018 வரை, 10 புயல்களை தமிழகம் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நம் காலத்தில் சுனாமியை பார்த்தோம்; பேரழிவை தந்தது. 2009ல் நடந்த ஐ.நா., மாநாட்டில், அறிவியல் விஞ்ஞானிகள் அளித்த அறிக்கையில், 'கடல் நீர் மட்டம் 2100ம் ஆண்டில், 4 அடி உயரம் அதிகரிக்கும்; மாலத்தீவு இல்லாமல் போகும். கோல்கட்டா, சென்னை போன்றவை பாதிக்கப்படும்' என, தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, அவர் பேசிக் கொண்டிருந்த போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி மணி அடித்து, ''பத்து நிமிடம் முடிந்து விட்டது,'' என்றார்.

உடனே தியாகராஜன், ''ஏன் தலைவா, தி.மு.க., என்றால் தான் பெல் அடிக்கிறீர்கள். அவர்கள் கத்தினால் விட்டு விடுகிறீர்கள். பத்து ஆண்டுகளில் அவர்கள் கபடி விளையாடினர்; நாங்கள் விளையாடவில்லை,'' எனக்கூற சிரிப்பலை எழுந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X