பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மின் இணைப்புக்கு ஆன்லைனில் கட்டணம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்: புதிய மின் இணைப்புக்கு, ஆன்லைனில் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டுமென, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.மின் வாரிய பணிகள், சேவைகள், கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. மின் கட்டணம், ஆன்லைனில் செலுத்தும் முறையால், மக்களின் சிரமம் குறைந்தது.கடந்த ஓராண்டாக, புதிய மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளும், ஆன்லைன் சேவையாக மாற்றப்பட்டுள்ளன. ஆன்லைனில்

திருப்பூர்: புதிய மின் இணைப்புக்கு, ஆன்லைனில் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டுமென, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் வாரிய பணிகள், சேவைகள், கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. மின் கட்டணம், ஆன்லைனில் செலுத்தும் முறையால், மக்களின் சிரமம் குறைந்தது.கடந்த ஓராண்டாக, புதிய மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளும், ஆன்லைன் சேவையாக மாற்றப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், 'டிபாசிட்' தொகை ரொக்கமாக பெறப்பட்டது.

இந்நிலையில், புதிய இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் மட்டுமே டிபாசிட் செலுத்த வேண்டும் என, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதோடு, இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இடைத்தரகர்கள் ஏமாற்றி பணம் பறிப்பதை தடுக்க, ஆன்லைனில் நேரடியாக பணம் செலுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X