பொது செய்தி

தமிழ்நாடு

உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றம்: புற்றுநோய், இருதய நோயாளிகள் தவிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை: உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றத்தால், நோயாளிகள் பலரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.இருதய நோய், புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை, ரத்தகொதிப்பு, சிறுநீரகம், நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான மருந்துகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இருதய நோயாளி ஒருவர் மருந்து மாத்திரைக்காக கடந்தாண்டு

கோவை: உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றத்தால், நோயாளிகள் பலரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இருதய நோய், புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை, ரத்தகொதிப்பு, சிறுநீரகம், நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான மருந்துகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இருதய நோயாளி ஒருவர் மருந்து மாத்திரைக்காக கடந்தாண்டு வரை, மாதத்துக்கு 900 ரூபாய் செலவிட்டு வந்த நிலையில், தற்போது மாதம் 1,200 ரூபாய் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மருந்து, மாத்திரைகளின் விலை, ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. இருதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்க்கான மருந்து மாத்திரைகளின் விலை, மூன்று முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பி வாழும் நோயாளிகளுக்கு இது பொருளாதார ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

கோவை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில்,''பெட்ரோல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வே, மருந்து விலை உயர்வுக்கு காரணம். ஒரு சில பெரிய கம்பெனிகள், மொத்த விற்பனையாளர்களிடம் அதிகளவில் மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்வதால், குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த தள்ளுபடியில் இருந்து ஒரு பகுதியைதான் மருந்தகங்கள் விற்பனைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. சிறிய மருந்துக்கடைகள் குறைவான அளவில் பர்சேஸ் செய்வதால், தள்ளுபடியில் மருந்துகளை விற்பனை செய்வதில்லை. இதை கருத்தில் கொண்டுதான் விற்பனை நடக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X