பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் கொள்கை உருவாக்க பணிக்குழு: கோவை தொழில்துறையினருக்கு வாய்ப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;மாநில திட்டக்குழு அமைத்துள்ள தொழில் கொள்கை வடிவமைப்பு குழுவில், கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.சென்னையில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில், தொழில் சார்ந்த, 10 குறிப்பிட்ட கருப்பொருட்கள் மீது, புதிய கொள்கை உருவாக்கி, அடுத்தாண்டு, ஜனவரிக்குள் வெளியிடுவது எனவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்க, தொழில் சார்ந்த கொள்கைகளை

கோவை;மாநில திட்டக்குழு அமைத்துள்ள தொழில் கொள்கை வடிவமைப்பு குழுவில், கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.சென்னையில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில், தொழில் சார்ந்த, 10 குறிப்பிட்ட கருப்பொருட்கள் மீது, புதிய கொள்கை உருவாக்கி, அடுத்தாண்டு, ஜனவரிக்குள் வெளியிடுவது எனவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்க, தொழில் சார்ந்த கொள்கைகளை வடிவமைக்க தனிக்குழு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, தொழில் கொள்கை வடிவமைக்க அமைத்துள்ள புதிய குழுவில், அரசு அதிகாரிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என, 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், தமிழக தொழில்துறை முதன்மை செயலர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலர் நீரஜ் மிட்டல், எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் அருண் ராய் உள்ளிட்ட அதிகாரிகள், தொழில் துறை தரப்பில், கோவை 'கொடிசியா' தலைவர் ரமேஷ்பாபு, தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) செயலாளர் செல்வராஜு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள், மாநில திட்டக்குழு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று, புதிய கொள்கை வடிவமைப்பதற்கான ஆலோசனை வழங்குவர். இது, தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்கின்றனர், கோவை தொழில் துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X