பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர் தகவல் சேகரிப்பு: எஸ்.பி., செல்வநாகரத்தினம் தகவல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சூலுார்:''கோவை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் குறித்த தகவல் திரட்டும் பணி தீவிரமாக நடக்கிறது,'' என, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் கூறினார்.மாவட்ட போலீஸ் மற்றும் சூலுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது; 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தினர்.முகாமை துவக்கி வைத்து, எஸ்.பி., செல்வ நாகரத்தினம்

சூலுார்:''கோவை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் குறித்த தகவல் திரட்டும் பணி தீவிரமாக நடக்கிறது,'' என, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் கூறினார்.மாவட்ட போலீஸ் மற்றும் சூலுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது; 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தினர்.முகாமை துவக்கி வைத்து, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் கூறியதாவது:போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், 98 சதவீதத்தினர் முதல் டோஸ், 92 சதவீதத்தினர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். இரு சக்கர வாகன ரோந்து, 20ல் இருந்து, 32 ஆகவும், நான்கு சக்கர வாகன ரோந்து, நான்கில் இருந்து, 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 1,800 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், கருமத்தம்பட்டி உள்ளிட்ட மூன்று சப் -டிவிஷன்களில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்களின் ஏஜன்ட்கள் மூலம், அவர்களது ஆதார் உள்ளிட்ட முழு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பெற்றோர் அல்லது உறவினர்களின் புகைப்படத்துடன் கூடிய முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவை சேகரிக்கும் பணி நடக்கிறது.இவ்வாறு, எஸ்.பி., கூறினார்.டி.எஸ்.பி., ஆனந்த் ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் மாதையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X