டேப்லெட், மொபைல்போன் திருடிய வாலிபர் கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஓட்டலில் டேப்லெட், மொபைல் போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமில், 32. இவர்,நண்பர்களுடன் இணைந்து மிஷன் வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.இந்த ஓட்டலில் கடந்த ஜூலை 12ம் தேதி இரவு பின்பக்க கதவை உடைத்துஉள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2டேல்லெட், மொபைல் போன் ஆகியவற்றை திருடிச்சென்றனர். புகாரின் பேரில்

புதுச்சேரி-ஓட்டலில் டேப்லெட், மொபைல் போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமில், 32. இவர்,நண்பர்களுடன் இணைந்து மிஷன் வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.இந்த ஓட்டலில் கடந்த ஜூலை 12ம் தேதி இரவு பின்பக்க கதவை உடைத்துஉள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2டேல்லெட், மொபைல் போன் ஆகியவற்றை திருடிச்சென்றனர். புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி மிஷன் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அதில், ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ், 22; என்பதும், ஓட்டலில் டேப்லெட் மற்றும் மொபைல் போனை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், 2 டேப்லெட், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X