புதுச்சேரி-அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம், வரும் 7ம் தேதி நடக்கின்றது.அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் 1884ம் ஆண்டு அறிமுகமாகி, 137 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மத்திய அரசு நேரடியாக அஞ்சல் துறை மூலம் நடத்தும் நலத்திட்டம்.மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களை விட குறைந்த பிரீமியம் அதிக போனஸ் வழங்கப்படுகிறது.கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என்பது கிராமிய மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு நேரடியாக நடத்தும் காப்பீடு திட்டமாகும்.கிராம மக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.செலுத்தும் பிரீமியத் தொகை மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வருமான வரி விலக்கு உண்டு.புதுச்சேரி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களில் இந்த திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம்கள் இந்த மாதம் 7,18 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கின்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE