பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகளின் செயல்பாடு: அன்பழகன் குற்றச்சாட்டு

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி-''எதிர்க்கட்சிகள் உப்பு சப்பில்லாத விஷயத்தை சபையில் பேசி சட்டசபையின் நேரத்தை வீணடித்துள்ளனர்'' அ.தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது.கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடியிலும் கடந்த தி.மு.க., காங்., ஆட்சியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு காலி

புதுச்சேரி-''எதிர்க்கட்சிகள் உப்பு சப்பில்லாத விஷயத்தை சபையில் பேசி சட்டசபையின் நேரத்தை வீணடித்துள்ளனர்'' அ.தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது.கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் கடும் நிதி நெருக்கடியிலும் கடந்த தி.மு.க., காங்., ஆட்சியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு காலி பணியிடங்கள் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியம் உயர்வு, குப்பை வரி நீக்கம், ஆஷா பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார்.பட்ஜெட்டில் மொத்த தொகையில், 91 சதவீதம் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்திற்கு செலவு செய்வதாக தி.மு.க., கூறியுள்ளது. உண்மையில், அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்திற்கு ரூ. 3190 கோடி (33.04) சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.மின்சாரம் வாங்கும் செலவு, கடன் வட்டி செலுத்துதல் உள்ளிட்டவை அரசு அவசிய செலவினங்கள். இவை அரசு ஊழியர்கள் செலவினங்கள் இல்லை. வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை எதிர்கட்சிகள் வழங்கவில்லை.கலால் துறை, பத்திரப் பதிவு துறை, போக்குவரத்து துறையில் ரூ. 1000 கோடிக்கு மேல் வருவாய் பெருக்க வழி இருந்தும் காங்., தி.மு.க., எதிர்கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருந்தது.மதுபான கடைகளை அரசு நடத்தினால் ரூ. 600 கோடி மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். தங்களின் சுய நலத்திற்காக அரசிடம் அவை வலியுறுத்தப்படவில்லை. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை பெறுதல், கட்டண உயர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, பல்கலைக் கழகத்தில் அனைத்து பாட பிரிவுகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பிரச்னைகள் குறித்து பேசாதது சரியான செயல் இல்லை.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
05-செப்-202102:50:31 IST Report Abuse
BASKAR TETCHANA அன்பழகன் முதலில் நீ திருந்து. உன்னால் தான் புதுவையில் அண்ணா.தி.மு.க. காணாமல் போனது. அம்மா இருந்த போதெல்லாம் எதையாவது சொல்லி நன்றாக சம்பாதித்து விட்டாய். உனக்கு இனி கட்சி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. கட்சியை வளர்க்க நீ என்ன செய்தாய். உன்னுடைய ஈகோ புத்தியால் கட்சி ஒரு சீட் கூட முடியவில்லை. இந்த லெட்சணத்தில் உனக்கு புதுவை பொது செயலாளர் பதவி வேறு. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாயில்லை ஒரு சீட் கூட ஜெயிக்கத்த நீ கட்சியை விட்டு ராஜினாமா செய்து இருக்க வேண்டும். உனக்கு எல்லாந் ஏன் தலைவர் பதவி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X