பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சதம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகி வருகிறது. கிராமப்புறங்களில் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது.நேற்று முன்தினம் 5,017 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரியில் 70,

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகி வருகிறது. கிராமப்புறங்களில் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது.நேற்று முன்தினம் 5,017 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரியில் 70, காரைக்கால் -17, ஏனாம் - 8, மாகியில் 25 பேர் என மொத்தம் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,049 ஆக உயர்ந்துள்ளது.ஜிப்மரில் 85, நெஞ்சக மருத்துவமனையில் 16, கேர் சென்டரில் 7 பேர் உட்பட, 172 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 765 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.நேற்று முன்தினம் 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை, 1,21,296 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.மாகியில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். அதையடுத்து, கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை, 1816 ஆக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X