பொது செய்தி

இந்தியா

அண்ணா திடலில் விழுந்த அரச மரத்திற்கு மறுவாழ்வு; பாண்டி மெரினாவில் நடப்பட்டது

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அண்ணா திடலில் சாய்ந்து விழுந்த 45 ஆண்டு அரச மரம், பாண்டி மெரினா கடற்கரையில் நடப்பட்டது.புதுச்சேரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், அண்ணா திடலில் ஸ்டேடியம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, அருகில் இருந்த 45 ஆண்டுகள் பழமையான அரச மரம் சாய்ந்து விழுந்தது.இதை அறிந்த பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு, ஸ்மார்ட்

புதுச்சேரி-அண்ணா திடலில் சாய்ந்து விழுந்த 45 ஆண்டு அரச மரம், பாண்டி மெரினா கடற்கரையில் நடப்பட்டது.புதுச்சேரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், அண்ணா திடலில் ஸ்டேடியம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, அருகில் இருந்த 45 ஆண்டுகள் பழமையான அரச மரம் சாய்ந்து விழுந்தது.இதை அறிந்த பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் உதவியுடன், அரச மரத்தை வேறு இடத்தில் நட்டு வளர்க்க முடிவு செய்தனர்.சமூக அமைப்பினர், சாய்ந்து விழுந்த அரச மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு, வேருடன் கூடிய மரத்தை தோண்டு எடுத்தனர்.கிரேன் உதவியுடன் மரம் எடுத்துச் செல்லப்பட்டு, வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரையோரம் நடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X