காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
காரைக்கால் -கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2ம் தேதி காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த செண்பகம், குப்புசாமி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.நேற்று முன்தினம் இரவு

காரைக்கால் -கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2ம் தேதி காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த செண்பகம், குப்புசாமி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மீன்பிடிக்க வந்த இலங்கை மீனவர்கள் அத்துமீறி, காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.படகில் இருந்த ஜி.பி.எஸ்., கருவி மற்றும் வலைகள், மீன்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துக் கொண்டனர்.தாக்குதலில் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த குப்புசாமி(45), நாகேந்திரன்(42), காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதரன் (30)ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்; எட்டு மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர்.நேற்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயம் அடைந்த மீனவர்களை எம்.எல்.ஏ.,கள் திருமுருகன்.நாஜிம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X