பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் மீது பரிவு காட்டுங்கள்

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை, பொதுவெளியில் வெளியிடும் அவலத்தை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சில ஊடகங்களும் செய்ய துவங்கி இருப்பது, நீதித் துறையினர் மத்தியில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.டில்லியைச் சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி சமீபத்தில் பாலியல்
பாலியல் வன்கொடுமை,பெண்கள் ,பரிவு காட்டுங்கள்

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை, பொதுவெளியில் வெளியிடும் அவலத்தை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சில ஊடகங்களும் செய்ய துவங்கி இருப்பது, நீதித் துறையினர் மத்தியில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி சமீபத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோரை சந்தித்த காங்., - எம்.பி., ராகுல், 'இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை உங்களுடன் துணை நிற்பேன்' என்றார்.
சலசலப்புஇந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட ராகுல், சிறுமியின் பெற்றோருடன் இருக்கும், 'வீடியோ' காட்சிகளை வெளியிட்டார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.சிறார் நீதி சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடுவது குற்றம். இதற்கு ஆறு மாதங்கள் முதல், ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. இதையடுத்து, ராகுலின் 'டுவிட்டர்' கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

மேலும், ராகுலின் பதிவை பகிர்ந்த காங்., தலைவர்கள் அஜய் மக்கான், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட ஐந்து பேரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் மீது வழக்கு பதிவு செய்யும்படி, மகரந்த் சுரேஷ் என்ற சமூக ஆர்வலர், டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, வரும் 27ல் விசாரணைக்கு வருகிறது.அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சில ஊடகங்களும் இது போன்ற விவகாரங்களில் சமூக பொறுப்புணர்வு இன்றி செயல்படுவது, கடந்த காலங்களில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கதுவாவில், எட்டு வயது சிறுமி 2018ல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த சிறுமியின் பெயர் மற்றும் இதர அடையாளங்களை, சில அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வெளியிட்டன.'அவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது' என கேள்வி எழுப்பி, டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியது.பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படுவது குறித்து 2017ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதிர்ச்சிஅதில், மூன்று ஆங்கில நாளிதழ்களில் வெளியாகும் 'க்ரைம்' செய்திகளில், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் 34 சதவீதம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அரசியல்வாதிகள், ஊடகங்கள் மட்டுமின்றி, பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளும் இது போன்ற தவறுகளை செய்துள்ளனர்.டில்லியில் 2016ல் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது தலித் சிறுமியின் அடையாளத்தை, டில்லி பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்டார். அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2015ல் டில்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை, டில்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் பகிரங்கமாக வெளியிட்டனர். இதற்கு, டில்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.கடந்த 2018ல் நிபுன் சக்சேனா - மத்திய அரசு இடையிலான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன் விபரம்:பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்களின் பெயர்கள், வசிப்பிடம், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை, அச்சு, காட்சி மற்றும் செய்தி இணையதளங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சிறிய தகவல் கூட எந்த வடிவிலும் வெளியாகக் கூடாது.இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டது.இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் என்.பி.எஸ்.ஏ., எனப்படும் செய்தி ஒலிபரப்பு தர ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள விதிமுறைகளும் இதை வலியுறுத்துகின்றன.
மக்களின் விருப்பம்கடந்த 2012ல் டில்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்குக்கு பின், இது தொடர்பான சட்ட திட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன.பாலியல் வன்கொடுமையால் ஏற்கனவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் பெரிய உதவிகள் செய்ய வேணடாம். மாறாக அவர்களது அடையாளத்தை வெளியிடாமல் பாதுகாப்பதே, அவர்கள் மீது நாம் காட்டும் மிகப் பெரிய பரிவாக இருக்கும் என்பதே பொதுமக்களின்

விருப்பம். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-செப்-202107:35:43 IST Report Abuse
Kasimani Baskaran பரிவு காட்டத்தான் வின்சி இருக்கிறாரே. ஒருவர் தையல் மிசின் வாங்கிக்கொடுப்பார், ஒருவர் சன்மானம் கொடுப்பார். இவன்களின் செயல்பாடு பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பது போலவே இருக்கிறது.
Rate this:
Cancel
05-செப்-202106:26:40 IST Report Abuse
அப்புசாமி பாலியல் குற்றங்கள் செய்தவர்களை ஒரே வாரத்தில் விசாரிச்சு தயவு தாட்சண்யமின்றி தூக்கில் போடுவதுதான் நீங்க காட்டும் பரிவு. அப்பத்தான் இது மாதிரி குற்றங்கள் குறையும். அதை விட்டுட்டு இரக்கப் படுங்கள், பரிவு காட்டுங்கள் நமக்கு அட்வைஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X