பொது செய்தி

இந்தியா

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த நாஜிம் வலியுறுத்தல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
காரைக்கால் -புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் நேற்று கூறியதாவது:தமிழகம் மற்றும்

காரைக்கால் -புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் நேற்று கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் மீது தொடர்ந்து நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வருவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து தி.மு.க., தலைமை சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X